முழு வில்லனாக கோபி மாற இனியாவுக்கு பாக்கியா அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடு ஈஸ்வரி அவமானப்பட்டு வீட்டுக்கு போன கோபி அப்செட்டாக இருக்க ராதிகா ஆறுதல் சொல்ல எல்லாரும் என்ன எதுக்கு வில்லன்னா சித்தரிக்கிறாங்க? என் பக்கம் நியாயத்தை யாரும் யோசித்து கூட பார்க்க மாட்டுறாங்க அந்த பாக்கியா நடிச்சு எல்லாரையும் தன் பக்கம் வச்சிக்கிட்டு இருக்கா என்று ஆவேசப்படுகிறார்.

கோபி நீங்க எதுக்கு அவங்கள பத்தி எல்லாம் யோசிக்கிறீங்க நம்ப வாழ்க்கையை மட்டும் நாம பார்க்கலாம் என்று சொல்ல அதையும் ஏற்க மறுக்கிறார். அந்த பாக்கியவை பழி வாங்கணும் போல இருக்கு அவள தன்னந்தனியா நிக்க வச்சு கதற வைக்கணும் அதை பார்த்து நான் கைதட்டி சீக்கிரம் சந்தோஷப்படணும், சும்மா விடமாட்டேன் என கோபப்பட்டு எழுந்து செல்கிறார்.

அடுத்ததாக ஈஸ்வரியிடம் பாக்யா ஜெனியின் சீமந்தம் பற்றிய பேச்சை தொடங்க கூடிய சீக்கிரம் வச்சுக்கலாம் என்று சொல்ல பாக்கியா மண்டபத்தில் பெருசா பண்ணலாம் என்று சொல்கிறார். ஆனால் ஜெனியும் செழியனும் வீட்டிலேயே சிம்பிளா வச்சுக்கலாம் குழந்தைக்கு பெயர் வைக்கிற பங்ஷனை பெருசா கிராண்டா வச்சுக்கலாம் என்று முடிவெடுக்கிறார்.

அதைத் தொடர்ந்து பாக்யா சமையல் வேலைகள் எல்லாவற்றையும் முடித்து எல்லாருக்கும் பாக்ஸ் கட்டி அமிர்தா மற்றும் செல்வியிடம் கேன்டீன் நல்லபடியாக பார்த்துக்குங்க என்று கூறுகிறார்.

அதைத்தொடர்ந்து ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் முடித்து பாக்கியா பழனிச்சாமி மற்றும் லோபிதா என்று மூவரும் ஒரு டீக்கடையில் நின்று டீ குடித்துக் கொண்டிருக்க அந்த சமயம் பார்த்து தன்னுடைய நண்பருடன் அந்த பக்கம் கோபி வருகிறார்.

கோபி நண்பன் இவர்களை பார்த்து காரை நிறுத்த சொல்ல பாக்கியாவும் பழனிச்சாமியும் சிரித்து பேசிக் கொண்டிருப்பதை பார்த்து கோபி கடுப்பாகிறார். இவர்கள் பேசுவதை பார்க்க பார்க்க கோபிக்கு கோபம் அதிகமாகிறது. அப்படி என்ன பேசுவாங்க அந்த லாம் போஸ்ட் நாளைக்கு சாப்பாடு கொண்டு வாங்கன்னு சொல்லுவோம் இவ நான் கொண்டு வரேன் நான் உங்களுக்கு ஊட்டி விடுறேன் நீங்க எனக்கு ஊட்டி விடுங்கன்னு பேசுவா என்று நக்கல் அடிக்கிறார்.

பிறகு பாக்கியா அங்கிருந்து காலேஜ் கிளம்பி சென்றதும் இவர்களும் கிளம்பி வருகின்றனர். காலேஜில் பாக்கியா உட்கார்ந்து இருக்க இனியா தன்னுடைய தோழிகளுடன் வர அப்போது அவர்கள் பாக்யாவுக்கு ஹாய் சொல்லிட்டேன் நீங்களும் வருகிறீர்களா என்று கேட்க அதெல்லாம் வேண்டாம் உங்களுக்காக நானே ஸ்னாக்ஸ் கொண்டு வந்திருக்கிறேன் என்று சொல்லி எடுத்துக் கொடுக்க இனியாவின் தோழிகள் அதை சாப்பிட்டு ஆக ஓஹோ என பாராட்ட இனியாவுக்கு முகம் மாறுகிறது. இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.