
கணேஷ் அமிர்தாவை பார்க்க கிளம்ப இங்கே அமிர்த அதிர்ச்சி அடைகிறார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ரவுடிகள் இனியாவை ரவுண்டு கட்ட அதைப் பார்த்து பாக்கியா அவர்களிடம் சத்தம் போட்டு இனியாவை பத்திரமாக அழைத்து வருகிறார்.

அடுத்ததாக ரூமுக்கு வந்த இவர்கள் எல்லோரும் லேடிஸ் தனியாக டூர் வந்தா கூட நல்லா தான் இருக்கு என்று ஈஸ்வரி பேச பாக்யா இதை எல்லாம் கேட்டு ஆச்சரியமடைகிறார். இனியாவிடம் அடுத்து உன்னை எப்போ வெளியே அனுப்புவாங்க என்று கேட்க பாக்கியா நம்ப நினைச்சா போயிட்டு வரலாம் அவளுடைய அசைன்மெண்டுக்காக எதுக்கு வெயிட் பண்ணனும் என கூறுகிறார்.
மறுபக்கம் கணேஷ் அவருடைய அப்பா அம்மாவிடம் அமிர்தா குறித்து கேள்வி கேட்டு தொடர்ந்து நச்சரிக்க இது உண்மையை மறைக்கிறார்கள் என கணேசுக்கு தெரிய வருகிறது. என்னாச்சு என்று திரும்பத் திரும்ப கேள்வி கேட்க நீ இறந்துட்டதா நினைச்சு அமிர்தாவை அவங்க வீட்ல கூட்டிட்டு போய்ட்டாங்க என்று சொல்லி சமாளிக்கின்றனர்.

சரி இப்பதான் நான் வந்துட்டேன்ல நான் போய் பேசி அமிர்தாவை கூட்டிட்டு வரேன் என்று சொல்ல இவர்கள் அதிர்ச்சி அடைந்து நீ அங்க போனாலும் பிரயோஜனம் கிடையாது அமிர்தாவோட குடும்பம் மொத்தமா சென்னைக்கு போயிட்டாங்க. அவங்க போன் நம்பர் கூட தெரியாது எங்க இருக்காங்கன்னு தெரியாது என்று சொல்லி சமாளிக்க கணேஷ் நீங்க எதுக்கு அவளை விட்டீங்க அவ என்னுடைய பொண்டாட்டி தேடி கண்டுபிடிக்கணும் என்று சொல்ல இவர்கள் கண்டுபிடிக்கலாம் பா நீ போய் தூங்கு என்று கணேஷை அனுப்பி வைக்கின்றனர்.

மறுபக்கம் அமிர்தா கனவில் வரும் கணேஷ் அவரை அவரது கழுத்தை நெரிக்க ஓடி வருவது போல கனவு கண்டு அலறி எழுந்து கொள்ள எழில் அமிர்தாவுக்கு ஆறுதல் சொல்லி படுத்து தூங்க சொல்கிறார். அடுத்து இங்கே ரூமில் எல்லோரும் வெளியே கிளம்ப தயாராக அப்போது பாக்கியா தனது பர்சை காணவில்லை என தேடுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.