ராதிகாவுக்கு ஈஸ்வரி சவால் விட கோபியை புலம்ப வைத்துள்ளார் பாக்யா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் அமிர்தாவும் செல்வியும் கிச்சனில் பேசிக் கொண்டிருக்க அப்போது ராதிகா கீழே இறங்கி வந்து இவர்கள் இருவரும் கிச்சனில் இருப்பதை பார்த்து டிவி பார்க்க செல்கிறார்.

ராதிகா சோபாவில் உட்கார்ந்து டிவி பார்த்துக் கொண்டிருக்க அப்போது கிச்சனுக்கு வரும் ஈஸ்வரி செல்வியிடம் வெண்ணீர் கேட்டுவிட்டு ராதிகா டிவி பார்ப்பதை பார்த்து ஹாலுக்கு சென்று ரிமோட்டை எடுத்து மாற்றி அவர் இஷ்டத்துக்கு டிவி பார்க்கிறார். இதனால் ராதிகா நான் தானே டிவி பாத்துட்டு இருக்கேன் நீங்க அப்புறம் பார்க்கலாம் அல்லவா என சொல்ல இது என் வீடு எங்க வீட்டு டிவி நான் எப்ப வேணாலும் பார்ப்பேன் இல்ல நிறுத்தி வைப்பேன் அதை நீ ஏன் கேக்குற என்று சண்டையிடுகிறார்.

பிறகு ராதிகா சமைக்க கிச்சனுக்கு வர செல்வி வெண்ணீர் எடுத்து வந்து ஈஸ்வரிக்கு கொடுக்க எனக்கு அப்படியே ஒரு காபி கொடு என கேட்கிறார். உடனே செல்வி இப்போதைக்கு காபி கிடைக்காது இரண்டு அடுப்பும் பிசியா இருக்கு என ராதிகா சமைக்கும் விஷயத்தை சொல்கிறார். திரும்பி கிச்சனுக்கு வரும் ஈஸ்வரி அது ரெண்டுத்தையும் இறக்கி வைத்துவிட்டு ஒரு பக்கம் டிகாஷன் ஒரு பக்கம் பால் காய்ச்சி எனக்கு காபி குடு செல்வி என சொல்லி வம்பிழுக்க ராதிகா கோபப்படுகிறார்.

மேலும் ராதிகாவிடம் உன்னை கோபியிடம் இருந்து பிரித்து அவனிடம் விவாகரத்து வாங்கி கொடுத்து இந்த வீட்டை விட்டு வெளியே அனுப்புறேன் என சவால் விடுகிறார். பதிலுக்கு ராதிகா நான்தான் உங்க மருமகள் என உங்க வாயால சொல்ல வைக்கிறேன் என சவால் விட ஈஸ்வரி அப்படி ஒரு நிலைமை வந்தால் என் நாக்கு அறுத்து எறிஞ்சிடுவேன் என சொல்கிறார்.

அடுத்ததாக செழியன் கிளைண்டை பார்க்க போக அந்த பெண் செழியனிடம் வழிந்து வழிந்து பேசுகிறார். பிறகு கோபி வீட்டுக்கு வர பாக்யா தன்னுடைய தோழியுடன் சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருக்க இதைப் பார்த்து கோபி பழனிச்சாமியிடம் தான் பேசுவதாக நினைத்து புலம்புகிறார். முதல்ல கிளாசில் பேசினா, அப்புறம் வீட்டுக்கு போய் பேசினா இப்ப போன்ல வேற பேசுறா என புலம்புகிறார்.

பிறகு ரூமுக்கு வர ராதிகா கடுப்பாக உட்கார்ந்து இருக்க என்ன ஆச்சு என கேட்க ஈஸ்வரி விட்ட சவாலை பற்றி சொல்ல அந்த பாக்கியா நல்லவ மாதிரி நாடகமாடிக்கிட்டு இருக்கா.. குடும்ப குத்து விளக்கு மாதிரி நடிக்கிறா என கோபப்பட இது எல்லாம் என்கிட்ட சொல்லுங்க போய் உங்க வீட்ல இருக்கவங்க கிட்ட சொல்லுங்க என ராதிகா ஷாக் கொடுக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.