மகன்கள் கொடுத்த ஷாக் ஒரு பக்கம் இருக்க பாக்கியாவை நிற்க வைத்து அவமானப்படுத்தி உள்ளனர் கோபி மற்றும் ராதிகா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பாக்கியா கிச்சனில் யோசனையாக இருக்க அப்போது அமிர்தா பணத்தை பத்தி யோசிச்சிட்டு இருக்கீங்களா அதெல்லாம் ரெடி பண்ணிடலாம் கவலைப்படாதீங்க என்று சொல்ல பாக்கியா எழில் எங்க ஆளையே காணோம் என விசாரிக்கிறார்.

அதன் பிறகு அமிர்தா அவர் ஏதோ ஆட் சூட் இருக்குன்னு வெளிய போனாரு இன்னும் வரல நாலு நாளைக்கு இப்படித்தான் இருக்கும்னு சொன்னாரு என்று சொல்ல எழில் வீட்டிற்கு வந்து பாக்யாவிடம் 5 லட்சம் பணத்தை எடுத்துக் கொடுக்க அவர் ஷாக் ஆகிறார். பழனிச்சாமி சார் சொன்னவர் ஒரு ப்ராஜெக்ட் கொடுத்தார் அதுக்காகத்தான் வெளியில போயிருந்தேன். இதுல அஞ்சு லட்சம் இருக்கு இன்னும் நாலு நாள்ல அஞ்சு லட்ச ரூபாய் பணம் கிடைக்கும் அவர் முகத்துல அதைக் கேட்ட பணத்தை வீசி எறிஞ்சு வீட்டை விட்டு வெளியே அனுப்பிடலாம் என்று சொல்லி பணத்தை கொடுக்க பாக்யா வேண்டாம் என வாங்க மறுக்கிறார்.

எனில் இவ்வளவு நாளா உனக்காக எதுவுமே செய்ய முடியலன்னு வருத்தப்பட்டு இருக்கேன் இந்த பணத்தை வாங்கி கொண்டால் எனக்கு சந்தோஷமா இருக்கும் என்று சொல்லி பணத்தை கையில் வைக்க பாக்கியா சந்தோஷப்படுகிறார். அதனைத் தொடர்ந்து ஜெனி செழியனுக்கு போன் செய்து எங்க இருக்க என்று கேட்க அவர் பணத்தை எடுக்க பேங்குக்கு போயிட்டு இருக்கேன் என்று சொல்கிறார். இப்போதைக்கு ஒரு அஞ்சு லட்சம் ரூபாய் ரெடி பண்ண முடியும் மீதியை அப்புறம் ரெடி பண்ணலாம் என்று சொல்ல அஞ்சு லட்சம் ரூபாய் போதும் என ஜெனி சொல்கிறார்.

அதன் பிறகு எல்லோரும் உட்கார்ந்திருக்க எழிலை தாத்தா ராமமூர்த்தி பாராட்டி பேசிக் கொண்டிருக்க ஜெனி செழியனை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார். கொஞ்ச நேரத்தில் செழியன் வீட்டுக்கு வர எழில் இப்போ அம்மா கிட்ட 13 லட்சம் ரூபாய் பணம் இருக்கு இன்னும் ஒரு நாலு நாள்ல 5 லட்சம் ரூபாய் பணம் கிடைக்கும் அவர்கிட்ட தூக்கி எறிஞ்சிடலாம் என்று சொல்ல எதிலுமே என்னை சேர்த்துக்க மாட்டீங்களா என்று செழியன் கேட்க எல்லோரும் எதுவும் புரியாமல் இருக்கின்றனர்.

இன்னும் நாலு நாள் எதுக்கு? நாளையோட அவர் கொடுத்த டைம் முடியுது அதுக்கு முன்னாடி அவர் கேட்ட பணத்தை கொடுத்து வீட்டை விட்டு வெளியே அனுப்பனும் என சொல்லி 5 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொடுக்க இப்போதும் பாக்யா வேண்டாம் என்று சொல்கிறார். எனக்காக நீங்க எதுக்கு கஷ்டப்படணும் என்று கேட்க இது எங்களுடைய கடமை என்று சொல்லி சொல்லி பணத்தை கொடுக்க பாக்யா நான் ஜெயிச்சிட்டேன் ஆனந்த கண்ணீரில் மிதக்கிறார்.

இதனைத் தொடர்ந்து பாக்கியா அப்பணத்தை பூஜை அறையில் வைத்து சாமி கும்பிட்டு விட்டு திரும்ப கோபி மற்றும் ராதிகா இருவரும் பாக்யாவை நிற்க வைத்து 18 லட்சம் ரூபாய் பணத்தை ரெடி பண்ண முடியலையா என்று இருவரும் மாறி மாறி பேசி அவமானப்படுத்துகின்றனர். ராதிகா நீங்க மட்டும் இந்த வீட்டை விட்டு வெளியே போறீங்களா இல்ல மொத்த குடும்பத்தையும் கூட்டிட்டு கிளம்பிடுவீங்களா எதுவாக இருந்தாலும் எங்களுக்கு முன்னாடி தெரிஞ்சா அதுக்கு ஏத்த மாதிரி நாங்க பிளான் பண்ணுவோம் என்று சொல்கிறார்.

கோபி இவளால ஒரு லட்சம் ரூபாய் பணத்தை ரெடி பண்ணாதே வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பா பேசாம இருக்கும் போதே தெரியலயா எதுவும் ரெடி பண்ணல, எல்லாம் வாய் வார்த்தை தான் என்று அவமானப்படுத்தி என்ன எதுவும் பேசாமல் இருக்க என்று கேட்க இல்ல நீங்க பேசி முடிக்க காத்துகிட்டு இருக்கேன் என பாக்யா சொல்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.