தேர்தலில் நிற்கும் பாக்கியாவுக்கு எதிராக கோபி முடிவெடுக்க ராதிகா அதிர்ச்சி கொடுக்கிறார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் தேர்தலில் யாரும் நினைக்காத காரணத்தினால் அந்த ஏரியா செகரட்டரி தனது மனைவியை அன்னபோஸ்ட் செக்கரட்டரியாக தேர்வு செய்வதாக அறிவிக்கப்பட அப்போது பாக்கியா கோபி நக்கலாக பேசியது எல்லோரும் தன்னை பற்றி பேசியதை நினைத்து தேர்தலில் நிற்க ஒப்புக்கொள்கிறார்.

தேர்தலில் நிற்கும் பாக்யாவுக்கு எதிராக கோபி எடுத்த முடிவு.. ராதிகா கொடுத்த பெரிய அதிர்ச்சி - பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோடு அப்டேட்

எல்லோரும் கைத்தட்டி பாக்யாவுக்கு வாழ்த்து கூறுகின்றனர். தேர்தல் இந்த மாதம் 18ம் தேதி என அறிவிக்கப்படுகிறது. அடுத்ததாக பாக்யா வீட்டுக்கு வந்ததும் தேர்தலில் நிற்கப் போகும் விஷயத்தை சொல்ல எல்லோரும் சந்தோஷப்பட ஈஸ்வரி மட்டும் எதுக்கு இந்த வேண்டாத வேலை என கோபப்படுகிறார். எழில் அம்மா இது பண்ணாலும் போராடி தான் அனுமதி வாங்கணுமா ஏன் அவங்களுக்கு சப்போர்ட் பண்ண மாட்றீங்க என சொல்ல கடைசியில் ஈஸ்வரி என்னமோ பண்ணுங்க என கோபித்துக் கொண்டு உள்ளே செல்கிறார்.

அடுத்ததாக வீட்டுக்கு வரும் கோபி ராதிகா மற்றும் இனியாவிடம் இந்த ஏரியா செக்ரட்டி போஸ்ட்க்கு யார் நிற்கிறார் தெரியுமா உங்க அம்மா நிக்கிறா என சொல்லி பாக்கியா பற்றி தரக்குறைவாக பேசுகிறார். இதனால் கோபிக்கும் அப்பாக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. கோபி இது என்ன மாவாட்டற வேலைன்னு நெனச்சாளா உங்க மருமக என ஏளனமாக பேச அவ கண்டிப்பா ஜெயிப்பா? அதை ஜெயிச்சிடுவான்னு நீ இப்படி எல்லாம் பேசிட்டு இருக்க என சொல்கிறார்.

உன்ன விட அவளை இந்த ஏரியாவுல இருக்க எல்லாருக்கும் நல்லா தெரியும். நீ நடந்து போனா ஒருத்தர் உன்னை மதிக்க மாட்டாங்க ஆனா பாக்கியா எல்லாருடைய சந்தோஷம் தூக்கம் என எல்லாத்தயும் பங்கெடுத்து இருக்கா என கூறுகிறார். முடிஞ்சா நீ ஒரு தேர்தலை நின்னு ஜெயிச்சு காட்டு என சொல்ல கோபி நான் நிக்க முடியாது ஆனால் என் வைஃப் ராதிகா நிக்கலாம் அவ இந்த தேர்தல்ல நிப்பா ஜெயிச்சு காட்டுவா என சவால் விடுகிறார். ராதிகா அதெல்லாம் எனக்கு இன்ட்ரஸ்ட் இல்ல என சொல்ல நீ நில்லு ராதிகா எதுவா இருந்தாலும் பாத்துக்கலாம் என கோபி சொல்கிறார்.

தேர்தலில் நிற்கும் பாக்யாவுக்கு எதிராக கோபி எடுத்த முடிவு.. ராதிகா கொடுத்த பெரிய அதிர்ச்சி - பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோடு அப்டேட்

பிறகு கோபி ராதிகாவிடம் பேச ரூமுக்கு போக அப்போது நீங்க என்ன லூசா என்ன ராதிகா திட்டுகிறார். நான் எதுக்கு தேர்தல் நிக்கணும் என கேட்க நீயா நிக்க கூடாது என கோபி பதிலுக்கு கேள்வி கேட்கிறார். ஒரு கட்டத்தில் ராதிகா நீங்க நினைக்கிறதுக்கெல்லாம் நான் ஆள் கிடையாது என சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.