
இனியாவிடம் கோபி சொன்ன வார்த்தையால் அதிர்ச்சி அடைந்துள்ளார் பாக்யா.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் எல்லோரும் காபி குடித்துக் கொண்டிருக்க அப்போது செல்வி வெற்றி கொடி கட்டு என கார்த்திக் பாடிக்கொண்டே வீட்டுக்குள் என்ட்ரி கொடுக்க எல்லோரும் பாக்யாவை கைதட்டி வரவேற்கின்றனர்.

பிறகு வீட்டுக்குள் வந்த பாக்யாவிடம் சமையல் வேலை குறித்து விசாரிக்க அவர் கொஞ்சம் கூட நேரம் இல்லாமல் ஓடி ஓடி சமைத்தோம் எப்படி மூணு நாள் போச்சுன்னு தெரியல என்று சொல்ல பாக்கியா பட்ட கஷ்டத்தை பற்றி எல்லோரும் கவலைப்படுகின்றனர். பாக்யா கஷ்டம் இல்லாத வேலை எங்க இருக்கு நம்ம செஞ்ச வேலைக்கு பாராட்டி கிடைக்கும் போது அந்த கஷ்டம் எல்லாம் காத்துல பறந்து போய்விடும் நான் பாராட்டு மழையில் நனைந்து கொண்டே வந்தேன் என சந்தோஷமாக சொல்கிறார்.

அதனைத் தொடர்ந்து பாக்கியா இனியாவிடம் உனக்கு ஒன்னும் கோபம் இல்லையே நான் உன் கூட இருந்திருக்கணும் உன்ன விட்டுப் போய் இருக்கக் கூடாது என வருத்தப்பட்டு பேச இனிய எனக்கு அதெல்லாம் ஒன்னும் கோபம் இல்லை என்று சொல்கிறார்.

அடுத்ததாக எழில் மற்றும் இனியாவுடன் பாக்யா பேசிக் கொண்டிருக்கும் போது கோபி மற்றும் ராதிகா வீட்டுக்கு வருகின்றனர். ராதிகா மேரேஜ் சட்டத்தின் கோபி இனியாவிடம் போன இடத்துல உன்னை பத்தி தான் ஃபுல்லா நினைச்சுக்கிட்டே இருந்தேன் என்று கதையாக அளந்து விட பாக்கியா முறைத்து பார்க்க எழில் நல்லா அளந்து விடுங்க என கிண்டல் அடிக்கிறார்.

அதனைத் தொடர்ந்து பாக்யா தன்னுடன் சமையல் செய்தவர்களை கூப்பிட்டு வைத்து கேட்டரிங் செய்ததற்கான பணம் வந்துவிட்டது. ஆனா உங்களுக்கு இப்போ உடனடியா பணம் கொடுக்க முடியாது கொஞ்ச நாள்ல நான் கொடுத்து விடுகிறேன் சம்பளம் உங்களுக்கு கரெக்டா வந்துடும் என்று சொல்ல அவர்கள் எல்லோரும் அது ஒன்றும் பிரச்சனை இல்லை அக்கா நீங்க பொறுமையா குடுங்க என்று சொல்ல பாக்யா அவர்கள் செய்த உதவிக்காக நன்றி கூறுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.