கோர்ட்டில் நீதிபதியால் பாக்கியா கேட்ட கேள்வியால் அதிர்ச்சியாகியுள்ளார் கோபி.
Baakiyalakshmi Court Episode Promo : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் பாக்கியாவை விவாகரத்து செய்ய முடிவெடுத்துள்ள கோபி அவருக்கே தெரியாமல் அவரிடம் விவாகரத்து நோட்டீசில் கையெழுத்திட முதல் இயரிங் கோர்ட்டில் நடக்க உள்ளது.
இன்றைய எபிசோட்டில் பாக்கியா நாளைக்கு என்னோட கோர்ட்டுக்கு வரணும் என சொல்லியிருந்தார். இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் கோர்ட்டுக்குப் போன பாக்கியாவிடம் கல்யாணம் ஆகி எத்தனை வருஷம் ஆச்சு என நீதிபதி கேட்க 25 வருஷமாச்சி என பாக்கியா சொல்கிறார். இப்ப என்ன பிரச்சனை என கேட்க குழம்பிப்போன பாக்கியா என்ன பிரச்சனைங்க என கேட்கிறார்.
இந்த ப்ரோமோ வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.