பாக்கியா எடுத்த முடிவு, ஈஸ்வரி சொன்ன வார்த்தை, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!
பாக்கியா எடுத்த முடிவிற்கு ஈஸ்வரி கோபப்பட்டுள்ளார்.

தமிழ் சின்னத்திரைகள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் எழில் ஒரு குட் நியூஸ் இருக்கு என சொல்லி அனைவருக்கும் ஸ்வீட் கொடுக்கிறார். அனைவரும் என்ன குட் நியூஸ் என அவளோடு கேட்டுக் கொண்டிருக்க ஸ்வீட் சாப்பிடுங்க சொல்றேன் என சொல்லுகிறார்.உடனே ஸ்வீட் சாப்பிட்டு முடித்து விட்டு கேட்க டைரக்டர் எழில் பண்ண பாக்கியலட்சுமி படம் மிகப்பெரிய வெற்றியடைஞ்சதனால ப்ரொடியூசர் ஒரு ஃப்ளாட் கிப்ட் பண்ணி இருக்காரு என்று சொல்ல உடனே குடும்பத்தினர் அனைவரும் சந்தோஷப்படுகின்றன. இனியா செழியன் என அனைவரும் வாழ்த்து சொல்ல வீட போய் பாத்திட்டியா என பாக்யா கேட்கிறார்.
இல்லம்மா நாளைக்கு தான் போகணும் பெரிய வீடா என்று கேட்க ட்ரபிள் பெட்ரூம் தான் சொல்லி இருக்காங்க என்று சொல்ல அப்போ எனக்கு ஒரு ரூம் வேணும் என இனியா கேட்கிறார். உனக்கு இல்லாததா என்று என்று சொல்லுகிறார். உடனே கோபி எந்த ஏரியா என்றும் விசாரிக்க சாலிகிராமம் என்று சொல்லுகிறார் அந்த இடத்தில் ரொம்ப விலை அதிகமா இருக்குமே என் பிரண்டும் இப்போ ஒரு இடம் வாங்கி இருக்கா ஆனா ரொம்ப அதிகம் என்று சொல்ல, ஆமாம்பா அப்புறம் ஃபுல்லா காசு கொடுக்கல பாதி காசு தான் கொடுத்து இருக்காரு நம்மதான் பாதி கொடுக்கணும் என்று சொல்ல பாதியே ரொம்ப அதிகமா வரும் எழில் பரவால்ல என்று கோபி சொல்லுகிறார். ஆனால் ஈஸ்வரி எதுவும் பேசாமல் இருக்க எழில் என்ன ஈஸ் எதுவும் பேச மாட்ற என்று கேட்கிறார். பிளாட் எதுக்கு வாங்கணும் அப்படி வாங்கினாலும் காசா கொடுக்க சொல்ல வேண்டியது தானே அதுவும் பாதி காசு கொடுத்தா எப்படி என்று ஈஸ்வரி கேள்வி கேட்க கோபி அவரே சமாதானம் செய்து விடுகிறார்.
பிறகு இனியாவும் ஆகாஷும் போனில் பேசிக் கொண்டிருக்க இருவரும் வெளியே மீட் பண்ணலாம் நானும் பாக்குறேன் உன்ன ரொம்ப மிஸ் பண்றேன் என இனியா சொல்ல அந்தப் பக்கம் செல்வியும் இந்த பக்கம் பாக்கியாவும் வந்து விடுகின்றனர். இருவரும் பதறிப் போய் ஃபோனை வைத்துவிட யார்கிட்ட பேசிகிட்டு இருந்தா என்று செல்வி ஆகாஷிடம் கேட்க பிரண்டுமா என்று சொல்லுகிறார். யார் என்று கேட்க, ஆனந்த் உடம்பு சரியில்லைன்னு சொன்னா அதுதான் பாக்கணும்னு சொன்னேன் என்று சொல்லுகிறார். யார மிஸ் பண்றதா சொல்லிக்கிட்டு இருக்கேன் நீயா என்று சொல்ல என் பிரண்டு ஸ்டேட்டஸ் வச்சிருந்தா அதை பார்க்கும்போது மிஸ் பண்றதா சொன்ன என்று இருவரும் சமாளித்து விடுகின்றனர். செல்வி உன் மேல நான் ரொம்ப நம்பிக்கை வைத்திருக்கிறேன், என் நம்பிக்கை காப்பாத்து என்று சொல்லிவிடுகிறார். மறுபக்கம் பாக்கியாவும் போன் பண்றது தேவைக்காகவும் அவசரத்துக்காகவும் மட்டும்தான் யூஸ் பண்ணனும் நீ அதுலயும் மூழ்கி இருக்காத என்று சொல்ல இல்லமா போன வச்சுட்டேன் என்று சொல்லி சமாளித்து விடுகிறார்.
மறுநாள் காலையில் பாக்யா கிட்சனில் சிரித்துக் கொண்டே வேலை பார்த்துக் கொண்டிருக்க செல்வி பையன் வீடு வாங்கணும் சந்தோஷத்திலேயே சிரிச்சிகிட்டு இருக்கியா அக்கா என்று கேட்க ஆமா இருக்காதா அதுவும் எழில் வாங்கியது எனக்கு டபுள் சந்தோஷம் என்று பேசிக் கொண்டிருக்க கிச்சன் வாசலில் எழில் நிற்பது போல இருக்க அங்க பாரு எழில் நின்னுகிட்டு இருக்கான் இப்ப கூட அவங்க இருக்கிற மாதிரியே தோணுது என்று சொல்ல செல்வி பார்த்துவிட்டு உனக்கு தோணுனா பரவால்ல எனக்கும் தானே தோணுது என்று சொல்ல நிஜமாகவே தான் வந்திருக்கான் பாரு என்று சொன்னதினால் உடனே பாக்யா எனில் கூப்பிட்டு என்னடா காலையிலேயே வந்து இருக்க என்ன விஷயம் காபி போடவா என்று கேட்க அதெல்லாம் வேணாம்மா அப்புறம் பாத்துக்கலாம் என்று சொல்லுகிறார். பிறகு என்ன விஷயம் என்று கேட்க பாட்டி தான் போன் பண்ணி வர சொன்னாங்க என்று சொல்லுகிறார். உடனே பாக்யா எதற்காக வர சொல்லி இருப்பாங்க என்று யோசிக்கிறார்.
ரொம்ப யோசிக்காதீங்க என்று சொல்லி ஈஸ்வரியும் கோபியும் வருகின்றனர். என்ன விஷயம் என்று கேட்க நீ அங்க வீடு வாங்கிட்டினா அங்க போயிடுவியா என்று கேட்கிறார் அதற்கு எழில் எனக்கு அந்த சந்தேகம் இருந்தது பாட்டி ஆனா அம்மா தான் தீர்த்து வச்சாங்க என்று சொல்ல என்ன சொல்றா என்று கேட்க அங்கே போக சொல்றாங்க என்று சொல்லுகிறார். ஆனால் ஈஸ்வரி நீங்க முதல்ல படம் முடிச்சு ரிலீஸ் ஆகி அடுத்த வாய்ப்பு கிடைச்சிருச்சு இங்க தானே வரணும் அப்படித்தானே பேசிருந்தீங்க என்று சொல்ல அதுவும் கரெக்ட் தான் பாட்டி ஆனால் அம்மா சொன்னது கரெக்ட்னு தோணுது என்று சொல்லுகிறார். உன் பசங்க உன்னை விட்டு பிரிந்து போறதில்ல உனக்கு அக்கறை இல்லையா என்று கேட்க அவங்க அவங்க குடும்பத்தோட சந்தோஷமா இருக்கட்டும் நான் அவங்கள என்னைக்குமே எதிர்பார்த்ததில்லை இதுக்கு மேல எதிர்பார்க்கவும் மாட்டேன் என்று சொல்லிவிட்டு எழிலிடம் நீ போய் உன் வேலையை பாரு எழில் என்று அனுப்பி விடுகிறார் ஈஸ்வரி நிற்க வைத்து பேச நினைத்தும் எழிலை வலுக்கட்டாயமாக பாக்யா அனுப்பிவிடுகிறார். இதனால் டென்ஷனான ஈஸ்வரி எல்லாருமே அவங்க இஷ்டத்துக்கும் பண்றாங்க என சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.
மறுபக்கம் பாக்கியா ரெஸ்டாரண்டில் வேலை பார்த்துக் கொண்டிருக்க ராதிகா போன் பண்ணுகிறார். ராதிகா என்ன பேசுகிறார்? அதற்கு பாக்யாவின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.
