பாக்கியா வீட்டிற்கு வந்த கோபி, ராதிகா சொன்ன வார்த்தை, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!
பாக்யா வீட்டிற்கு கோபி வர ராதிகா வார்த்தை ஒன்றை சொல்லியுள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கோபி ஈஸ்வரியுடன் சம்மதித்ததால் வீட்டுக்கு அழைத்து செல்ல அனைவரும் தயாராகின்றனர். ஆனால் பாக்யா அது எப்படி முடியும் என்னால் ஒத்துக்க முடியாது என்று சொல்ல இதுக்கு மேல என்ன கெஞ்ச வைக்காத பாக்கியா கடைசியில் என் பிள்ளையை நினைத்து என்னை சாக வச்சிராத உன்னை கையெடுத்து கும்பிடுகிறேன் என்றெல்லாம் பேசி ஈஸ்வரி கோபியை அழைத்து சென்று விடுகிறார்.எழில் மற்றும் பாக்யா இப்ப என்ன பண்ணுவது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார்.வீட்டில் போய் ஏதாவது பேச முடியுமானு பாக்குறேன் என்று பாக்யா சொல்லுகிறார் சரிம்மா நீ கொஞ்ச நாள் இங்க வந்திருக்கியா என்று கேட்க அதெல்லாம் வேணாம் எத்தனை நாளைக்கு மறைந்து ஓடிக்கிட்டு இருக்க முடியும் நான் பார்த்துக்கிறேன் என்று சொல்ல சரி ஏதாவது இருந்தா போன் பண்ணு என்று சொல்லிவிட்டு எழில் கிளம்பி விடுகிறார் உடனே ராதிகா பாக்யாவிடம் டிஸ்சார்ஜ் ஆகி உங்க வீட்டுக்கு வருவார் என்று சொன்னீங்க ஆனா இப்போ என்று கேட்க, அவரால ரொம்ப நல்லா இருக்க முடியாது வந்துருவாரு சொல்லி தான் அனுப்பினேன் என்று சொல்லுகிறார்.
ராதிகா பாக்யாவிடம் இததான நீங்க உங்களோட உள் மனசுல நினைச்சீங்க நீங்க நாடகம் ஆடுறீங்க உன் மனசுல கோபி மேல இருக்குற பாசம் உங்களுக்கு போகல அதனால வைஃப்னு கையெழுத்து போட்டு ஒருநாள் ஃபுல்லா ஹாஸ்பிடல் இருந்தீங்க என்றெல்லாம் கேட்க உங்களுக்காக இவ்வளவு தூரம் எங்கள் குடும்பத்தை எதிர்த்து பேசிட்டு இருக்குற நேர்ல பாத்துட்டு நீங்க இதுக்கு மேல கேக்குறீங்களா நான் என்ன சொல்ல முடியும் என்று சொல்லிவிட்டு பாக்யா சென்று விடுகிறார் மறுபக்கம் வீட்டுக்கு வந்த ஈஸ்வரி ஜெனி இடம் ஆரத்தி கரைத்து எடுத்துட்டு வா என்று சொல்ல எனக்கு தெரியாது பாட்டி என்று சொல்லுகிறார்.எப்படி என்று சொல்கிறேன் என்று சொல்ல நீங்களே போய் கரைச்சுக்கோங்க எனக்கு கரைக்க தெரியாது என்று சொல்லிவிட்டு உள்ளே சென்று விடுகிறார் பிறகு செல்வியிடம் சொல்ல அவரும் செய்யாததால் நானே செஞ்சிக்கிறேன் என்று ஈஸ்வரி ஆர்த்தி எடுத்து உள்ளே அழைத்து செல்கிறார்.
கோபிய ரூமில் தங்க வைத்த பிறகு உட்கார்ந்து கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து பாக்கியா உள்ளே வருகிறார். பாக்யாவை நிறுத்தி கோபிக்கு சாப்பாடு செஞ்சுடு பாக்கியா எல்லாருக்கும் செய்ற மாதிரி காரமா வேணாம் அவனுக்கு மூணு வேலைக்கு தனியா செஞ்சிடு என்று சொல்ல மெனு உங்ககிட்ட கேக்கணுமா இல்ல உங்க பையன் கிட்ட கேக்கணுமா என்று சொல்ல உன் இஷ்டம் பாக்கியா என்று ஈஸ்வரி சொல்லுகிறார் உடனே பாக்யா நான் அவ்வளவு தூரம் கூட்டிட்டு வர வராதிங்கனு சொல்லியும் எமோஷனல் டிராமா பண்ணி கூட்டிட்டு வந்துட்டு என்ன சமைக்க சொல்லிவிட பார்க்க சொல்றீங்களா என்னால முடியாது நான் பார்க்க மாட்டேன் நீங்க வேற கூட்டிட்டு வந்தீங்கன்னா நீங்களே பார்த்துக்கோங்க என்று சொல்லுகிறார் உடனே செழியன் மனசாட்சியே இல்லாம பேசுறியே அம்மா என்று கேட்க மனசாட்சி பத்தி நீ பேசாத சரியா என்று பாக்யா சொல்லி விடுகிறார். உடனே ஈஸ்வரி கிச்சனுக்கு சென்று நீ வரதுக்கு முன்னாடி என் பையன நான் தான் பாத்துக்கிட்டேன் அதே மாதிரி நானே பார்த்துப்பேன் என்று சொல்லி சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.
மறுபக்கம் ராதிகா வீட்டிற்கு வர ராதிகாவின் அம்மா மாப்ள எங்க இருக்காரு கார்ல வராரா ஆம்புலன்ஸ்ல வரார என்றெல்லாம் விசாரிக்க நான் ஆரத்தி எடுத்துக்கிட்டு வரேன் என்று நான் பேச அதுக்கெல்லாம் அவசியமில்லை இனிமேல் அவர் வரமாட்டாரு மொத்தமா அவங்க வீட்டுக்கு போயிட்டாரு என்று சொல்லுகிறார். உடனே மாயு அழுது கொண்டே நீ அழாதம்மா நான் உன்னை பார்த்துக்கிறேன் என்று சொல்லுகிறார். அதுக்கு தான் நான் வரேன்னு சொல்லி சொன்னேன் என்று ராதிகாவின் அம்மா சொன்ன நான் ஒன்னும் அமைதியா தான் இல்லம்மா அவரே அந்த முடிவு எடுத்துட்டு போகும்போது நான் என்ன பண்ண முடியும் என்று சொல்லுகிறார். நான் போய் கூட்டிட்டு வரேன் என்று சொல்ல அவரை வர விருப்பம் இல்லாதப்ப நீ எதுக்கு கூப்பிடனும் என்று தடுத்து நிறுத்துகிறார்.
இருந்தாலும் ராதிகாவின் அம்மா அங்கு போய் என்ன பேசுகிறார்? அதற்கு பாக்கியாவின் பதில் என்ன? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.