பிள்ளைகளை வைத்து பெரிய பிளான் போடும் கோபி, சந்தோஷப்பட்ட பாக்யா, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
பிள்ளைகளை வைத்து கோபி பெரிய பிளான் போடுகிறார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலை இன்றைய எபிசோடில் பாக்கியாவிடம் செல்வி எனக்கு என்னமோ இந்த பிரச்சனையை கோபி சார் தான் பண்ணிருப்பாருன்னு தோணுது என்று சொல்ல அவர் எனக்கு கெட்டது நடக்கணும்னு நினைப்பவர் தான் ஆனா இந்த அளவுக்கு செய்ற அளவுக்கு மோசமானவர் கிடையாது என்று சொல்லுகிறார் இது மட்டும் இல்லாமல் எனக்கு அந்த செக்கும் அது ஒரு டவுட் இருக்கு கா இன்னைக்கு அவ்ளோ பிரச்சனை நடக்குது அவர் பாட்டுக்கு ஓரமா நின்னு பாத்துகிட்டு உடனே கிளம்பி போயிட்டாரு என்று சொல்ல உனக்கு வேற வேலையே இல்லையா போய் வேலையை பாரு என்று சொல்லுகிறார் தப்பு எதுவும் இல்லன்னா என்னால வேலைக்கு வந்து இருக்க வேண்டியதுதானே என்று சொல்ல அவங்க பயத்துல இருப்பாங்க என்று சொல்லிவிட்டு பாக்யா பேசுகிறேன் என்று கிளம்புகிறார்.
மறுபக்கம் ஏழில் புரொடியூசர் வந்து சந்தித்து பட பூஜை குறித்து பேச மறுப்பக்கம் உடனே கோபி பின்னாலே வருகிறார். இதனைப் பார்த்த ப்ரொடியூசர் அங்கங்க அப்பங்க ஒண்ணுமே செய்யாம நான் தான் பண்ண என்று சொல்லிக் கொள்ளும் இந்த காலத்துல பையனுக்கு இவ்ளோ பெரிய வாய்ப்பு கொடுத்து இருக்கீங்க ஆனா ஏன் மறந்திருந்த சந்தோஷப்படுறீங்க நேர்ல மட்டும் சொல்லு அவன் கோபக்கார நேர்ல வந்தா ஏதோ வேணான்னு சொல்லிடுவான் இந்த வாய்ப்பை தட்டி கழிச்சிடுவான் என்று சொல்ல இந்த விஷயத்தை சொல்லாம போயிடுவீங்களா என்று சொல்ல சொல்லுவேன் கண்டிப்பா ஒரு நேரம் வரும் அப்ப சொல்லுவேன் என்று வில்லத்தனமாக சிரிக்கிறார். இதனால் கோபி பெரிய திட்டம் போடுகிறார் என்பது தெரிய வருகிறது.
ஜெனி பாக்யாவிற்கு ஃபோன் போட அவர் கரெக்டாக வீட்டுக்குள்ளே வருகிறார் செப்ப பாத்திட்டியா அக்கா என்று கேட்க பார்த்துவிட்டு அவர் பயந்துட்டு இருக்காரு நாளைக்கு வருவாரு வேலைக்கு என்று சொல்லிவிட்டு பிறகு ஆயுத பூஜைக்கு ஸ்வீட் ஆர்டர் எடுக்கலாம்னு இருக்கேன் என்று சொல்ல ஈஸ்வரி அதுக்குள்ள எதுக்கு பாக்கி அவசரம் இப்பதானே இவ்ளோ பெரிய பிரச்சினை முடிந்திருக்கிறது உடனே பண்ணனும்னு கேட்டா உடனே தான் அத பண்ணனும் நம்மளுக்கு வந்து கெட்ட பேரு சூட்டோட சூடா நல்ல பேராக்கணும் என்று சொல்லிவிட்டு அதுபோல் நீங்கதான் வந்து விளக்கேற்றி வேலை ஆரம்பித்து வைத்து தொடங்கனும் என்று சொன்னவுடன் ஈஸ்வரி கோபப்பட்டு என்னால உனக்கு வந்த பஸ்ட் பிரச்சனையே போதும் இதுக்கு அப்புறம் தேவை இல்லை என்று கோபமாக சொல்லிவிட்டு உள்ளே சென்று விடுகிறார். செல்வி எனக்கு என்னமோ அந்த செஃப் மேல தான் டவுட்டா இருக்கு ஆனா நீ அவர வச்சு திருப்பி பண்ணனும்னு சொல்றேன் என்று சொல்ல அதெல்லாம் இந்த வாட்டி எதுவுமே நடக்காது எல்லாம் நல்லபடியா நடக்கும் ஆயுத பூஜை முடிவதற்குள் அத்தை ராசி இல்லாதவங்கன்னு நினைச்சுக்கிட்டு இருக்கிறது மாறும் ஈஸ்வரி ரெஸ்டாரண்டுக்கு இருந்த கெட்ட பெயர் மாறும் என்று வாக்கு கொடுக்கிறார்.
பிறகு இனியா டான்ஸ் மாஸ்டரிடம் டான்ஸ் கற்றுக் கொண்டதற்கு அவர் ஸ்ட்ரிட்டாக பேசுகிறார். எதுக்கு ஸ்லோவா ஆடுற பாஸ்ட்டா ஆடு என்று சொல்ல, ரிகர்சல் தான மாஸ்டர் என்று இனியா சொல்லுகிறார். ரிகர்சலோ ப்ரோக்ராமோ ஒரே மாதிரி தான் ஆடணும் என்று சொன்னவுடன் இனியாவும் மாஸ்டரும் சேர்ந்து டான்ஸ் ஆடுகின்றனர் அதனை கோபி பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிறார்.
அமிர்தாவிடம் பாக்யா மளிகை சாமான் பொருட்கள் பற்றி பேசிக்கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து செஃப் வருகிறார். செல்வி அன்னைக்கு பிரச்சனைனும் ஓடிப் போயிட்டீங்க இப்ப எப்படி வந்தீங்க என்று சொல்ல பாக்கியா நீங்க போய் வேலையை பாருங்க என்று அனுப்பிவிட்டு இவரை வச்சு நீ ஆர்டர் எடுக்க போற எனக்கு என்னமோ இவரு முழியே சரி கிடையாது திருட்டு முழி மாதிரி இருக்கு என்று சொல்ல நீ போய் போலீஸ்ல சேர்ந்து இரு செல்வி என்று சொல்லுகிறார்.
ரெஸ்டாரண்டுக்கு வந்த ஏழில் பாக்கியாவிடம் என்ன பேசுகிறார்? அதற்கு பாக்கியாவின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்..

