மனோஜ்க்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு, சந்தோஷத்தில் குடும்பத்தினர், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

ஈஸ்வரி சொன்ன வார்த்தையால் பாக்கியா வருத்தப்பட்டுள்ளார்.

baakiyalakshimi serial episode update
baakiyalakshimi serial episode update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் செழியன் பாக்கியாவிடம் நான் வராததுக்கு சாரிமா என்று சொல்ல அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல நீ போ என்று அனுப்பி வைக்கிறார் ஈஸ்வரி அவன் பண்ணது தப்புதான் பாக்யா இதே அவனுக்கு ஏதாவது ஒரு பிரச்சினை வந்திருந்தா நீ போய் நின்னுருக்க மாட்டியா என்ன இருந்தாளும் கோபியோட ரத்தமும் உடம்புல இருக்கு பார்த்தல்ல என்று சொல்ல அதெல்லாம் ஒன்னும் இல்ல அத்தை பார்த்துக்கலாம் விடுங்க என்று சொல்லுகிறார். அப்படியெல்லாம் இல்ல பாக்யா எப்பவுமே உனக்குன்னு நீ கொஞ்சம் காசு சேர்த்து வச்சுக்கோ எல்லாத்தையும் செலவு பண்ணாத வருங்காலத்துக்கு உனக்கு தேவைப்படும் என்று சொல்ல அம்மா சொல்றது சரிதான் அக்கா நீ எல்லாத்தையும் மண்டையில ஏத்திக்க என்று சொல்ல இன்னைக்கு உங்க ரெண்டு பேருக்கும் என்ன ஆச்சு போய் ரெஸ்ட் எடுங்க என்று அனுப்பி வைக்கிறார்.

மறுநாள் காலையில் பாக்யா செழியனை நினைத்து வருத்தமாக இருக்க செல்வி பேசிக் கொண்டிருப்பதை கூட கவனிக்காமல் இருக்கிறார் என்னாச்சுகா என்று கேட்க இல்ல செழியன நினைச்சு தான் யோசிச்சிட்டு இருக்கேன் என்று சொல்லுகிறார் அவனுக்கு எதுவும் ஆபீஸ்ல பிரச்சனைன்னு சொல்றா சரியாவே பேசறது இல்ல. என்று சொல்ல அந்த நேரம் பார்த்து செழியன் வருகிறார். உடனே கிளம்பும்போது ஈஸ்வரி எதிரில் வர வேகமாக ஈஸ்வரி ரூமில் சென்று கதவை சாத்திக் கொள்கிறார்.

என்னாச்சு என்று எதுவும் புரியாமல் மூவரும் இருக்க என் மேல பாட்டி கோவமா இருக்காங்களாமா என்று செழியன் கேட்கிறார். அப்படியெல்லாம் ஒன்னும் இல்லடா என்று மூணு பேரும் கதவை தட்ட செழியனை வேலைக்குப் போக சொல்லுகிறார். பிறகு நீ போ செழியா நான் பாத்துக்குறேன் என்று செழியனை அனுப்பிவிட்டு பாக்கியா கதவை திறக்கச் சொல்ல ஏன் அத்தை செழியன் மேல உங்களுக்கு கோவமா என்று கேட்கிறார் கோவம் எல்லாம் கிடையாது என்று ஈஸ்வரி சொல்ல அப்புறம் என்ன அத்தை என்று கேட்கிறார்.

அவன் நல்லா இருக்கணும்னு தான் நான் அப்படி பண்ணேன் எனக்கு புரியல அத்தை என்று சொல்ல ஏற்கனவே அவனுக்கு வேலை மேல பிரச்சனை இருக்கு என் முகத்தில் முழிச்சிட்டு போனா அவனுக்கு பிரச்சனையாகும் நான் எதிரில் வந்தாலும் இல்ல ஏதாவது தொடங்கி வைத்தாலும் அது உருப்படாது நான் ராசி இல்லாதவ என்று சொல்லுகிறார் பாக்யா அப்படியெல்லாம் கிடையாது நீங்க எப்பவுமே இந்த வீட்டோட மகாலட்சுமி தான் என்று சொல்ல அப்படி எல்லாம் சொல்லாத பாக்யா இனிமே நீ வேலைக்கு போகும்போது ஜெனி கிட்ட மட்டும் சொல்லிட்டு போ, என்கிட்ட சொல்லாத என்று ரூமில் சென்று கதவை சாத்தி விடுகிறார். பிறகு என்ன அக்கா,உன் மாமியார் இப்படி எல்லாம் பேசிகிட்டு இருக்காங்க என்று சொல்ல எல்லாம் அந்த ஊர்காரங்க அவங்கள அப்படி பேச வச்சுட்டாங்க நான் டைவர்ஸ் கொடுக்கும்போது என்னை எப்படி பேசினார்களோ அதைவிட ரெண்டு மடங்கு இவங்கள அதிகமா பேசுறாங்க ஊர் வாயை மூடனும் என்று சொன்ன ஊர் வாயை நம்மால் ஒன்னும் பண்ண முடியாது ஆனா அவங்க சொன்னாலும் அத்தையை வந்து கண்டுக்க விடாம பண்ணு அதுக்கு ஏதாவது பண்றேன் என்று சொல்லுகிறார்.

இனியா டான்ஸ் பிராக்டிஸ் பண்ணும் இடத்திற்கு வர அனைவரும் மாஸ்டர் வைத்து டான்ஸ் கற்றுக் கொண்டிருக்கின்றனர். அந்த நேரம் பார்த்து இனியாவின் மேம் வர என்னை இனியா நீ மட்டுமே பேசிகிட்டு இருக்க பிராக்டீஸ் பண்ணலையா என்று சொல்ல இல்ல வீட்ல போய் பண்ணிப்பேன் என்று சொல்லுகிறார் மாஸ்டர் வைக்கலையா இன்னும் என்று கேட்க இல்லமா நானே பண்ணிப்பேன் என்று சொல்ல ஸ்டார்டிங்ல எல்லாம் ஈஸியா தான் இருக்கும் ஆனால் போகப் போக ரொம்ப டப்பா ஆயிடும் நீ ஒரு மாஸ்டர் வச்சி டான்ஸ் ட்ரைனிங் போ நான் வேணா உங்க வீட்ல பேசட்டுமா என்று கேட்க வேணாம் மேம் நான் பார்த்துக்கிறேன் என்று சொல்லுகிறார். உடனே ஏற்கனவே டான்ஸ்ல கலந்துக்கவே பர்மிஷன் வாங்கவே கஷ்டப்பட்ட இப்போ டான்ஸ் மாஸ்டர் வேரியா என்று இனியா யோசிக்கிறார்.

செழியன் எழிலை சந்தித்து வேலை போன விஷயத்தை சொல்ல அவரும் அதிர்ச்சடைகிறார் ஏற்கனவே வேலைக்கு போறவங்களே குழந்தைகளுக்கு சமாளிக்க முடியல, நான் என்னடா பண்ணப் போறேன் என்று சொல்ல அதெல்லாம் ஒன்னும் இல்ல செழியா வேலை கிடைச்சிடும் என்று ஆறுதல் சொல்லுகிறார். அம்மா நேத்து கஷ்டத்துல இருந்தாங்க ஆனா என்னால உதவி பண்ண முடியல என்று சொல்லுகிறார். எனக்கும் அந்த கஷ்டம் இருந்தது சரியா என்ன பண்றது எல்லாமே என்னால் மாறும். நானே நம்பிக்கை இருக்கும்போது உனக்கு கண்டிப்பா வேலை கிடைக்கும் என்று பேசிக் கொண்டிருக்கு அதனை கோபி பார்க்கிறார். பிறகு அவர் காரை எடுத்துக் கொண்டு சென்று விடுகிறார்.

பிறகு செழியன் கோபி ரெஸ்டாரண்டுக்கு வர இருவரும் என்ன பேசிக் கொள்கின்றனர்? கோபி என்ன சொல்கிறார்? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

baakiyalakshimi serial episode update
baakiyalakshimi serial episode update