Ayyappan Kovil : சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.இதனால் சபரிமலையில் பதற்றம் நிலவியது.
மேலும் இந்த தீர்ப்புக்கு எதிராக இந்து மத அமைப்புகளும், பல்வேறு அமைப்பினரும் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், கடந்த மாதம் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் செல்ல மனிதி அமைப்பினை சேர்ந்த 11 பெண்கள் முற்பட்டனர்.
ஆனால் பக்தர்களின் எதிர்ப்பினால் அவர்கள் பம்பையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். சாமி தரிசனம் செய்யாமல் திரும்பி சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் கோவில் சன்னிதானத்தில் 50 வயதுக்கு கீழ் உள்ள இரு பெண்கள் 18 படி ஏறாமல் மற்றொரு வாசல் வழியாக சென்று ஐயப்பனை தரிசனம் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், பெண்கள் இருவரும் கோவிலுக்குள் செல்லும்போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், அவர்களில் ஒருவர் இந்திய கம்யூனிஸ்டு (எம்.எல்.) அமைப்பினை சேர்ந்த பிந்து, வயது 42 என்றும், மற்றொருவர் மலப்புரத்தை சேர்ந்த கனகதுர்கா வயது 44 என்றும் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், ஐயப்பனை பெண்கள் தரிசனம் செய்தது உறுதி என்றால், புனிதப்படுத்தும் பூஜை நடத்தப்படும் என பந்தளமகாராஜா அறக்கட்டளை நிர்வாகி தீபா வர்மா தகவல் தெரிவித்து உள்ளார்.
இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் இரண்டு பெண்கள் சாமி தரிசனம் செய்தது உண்மைதான் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அவர்கள் காவல்துறையினரின் முழு பாதுகாப்புடன் தரிசனத்தை செய்ததாகவும் கூறியுள்ளார். இதனால் தற்போது அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.