Ayalan FL
சிவகார்த்திகேயன் நடிக்கும் அயலான் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.

Ayalan Official First Look  : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அயலான். நேற்று இன்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இப்படத்தை இயக்க ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

சிவகார்த்திகேயன் பிறந்த நாளான இன்று காலை 11.03 மணிக்கு நெல்சன் திலீப்குமார் இயக்கும் டாக்டர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருந்தது.

இதனை தொடர்ந்து தற்போது அயலான் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. டாக்டர் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் நாற்காலியில் அமர்ந்து போஸ் கொடுத்திருந்த சிவகார்த்திகேயன் அயலானில் வித்தியாசமாக போஸ் கொடுத்துள்ளார்.

24 Am ஸ்டுடியோஸ் நிறுவனமும் KJR ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இந்த படம் ஒரு சைன்ஸ் பிக்ஷன் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.