Avengers End game
Avengers End game

Avengers End game : 

இன்று உலகின் எந்த மூளைக்கு சென்றாலும் நம் செவியில் தவறாமல் வந்து விழும் ஒரு பெயர் அவெஞ்சர்ஸ்.

நேரடி தமிழ் படங்களை எல்லாம் ஓரங்கட்டும் அளவு தமிழிலும் வரலாறு காணாத எதிர்பார்ப்புடன் திரைக்கு வந்துள்ளது அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்.

ஏற்கனவே வெளியான முதல் மூன்று பாகங்கள் வசூலில் இமாலய சாதனைகள் படைக்க நான்காம் மற்றும் கடைசி பாகம் நேற்று வெளியாகியுள்ளது.

நமக்கு செட்டாகாது.. ஸ்ருதி ஹாசனை பிரிந்த காதலர் – அவரே பதிவிட்ட ட்வீட்.!

ஆனால் சீனா உள்ளிட்ட மற்ற நாடுகளில் செவ்வாய்க்கிழமையே வெளியாகிவிட்டது.

இந்த நிலையில் முதல்நாளில் உலகளவில் இப்படத்தின் வசூல் ரூ. 1403 கோடி எனும் ஒரு தகவல் வெளிவந்து பிரமிக்க வைத்துள்ளது.

முன்னெப்போதும் இல்லாத அளவு இப்படத்தை இந்தியாவில் பிரம்மாண்டமாக விளம்பரம் செய்து வருகிறது மார்வெல்.

ஏ.ஆர்.முருகதாஸ் வசனம், ஏ.ஆர்.ரகுமான் இசை என தமிழர்களுக்கு பரிச்சயமான பிரபலங்கள் இதில் பணியாற்றி உள்ளனர்.

இதில் விஜய் சேதுபதி அயர்ன் மேன் கதாபாத்திரத்துக்கு வாய்ஸ் கொடுத்துள்ளார். அதே போல் பிளாக் விடோ கதாபாத்திரத்துக்கு ஆண்ட்ரியா குரல் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.