Avengers Enda Game

Avengers End Game : இன்று உலகின் எந்த மூளைக்கு சென்றாலும் நம் செவியில் தவறாமல் வந்து விழும் ஒரு பெயர் அவெஞ்சர்ஸ்.

நேரடி தமிழ் படங்களை எல்லாம் ஓரங்கட்டும் அளவு தமிழிலும் வரலாறு காணாத எதிர்பார்ப்புடன் திரைக்கு வருகிறது அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்.

ஏற்கனவே வெளியான முதல் மூன்று பாகங்கள் வசூலில் இமாலய சாதனைகள் படைக்க நான்காம் மற்றும் கடைசி பாகம் இம்மாத இறுதியில் வெளியாகவுள்ளது.

தனுஷ் பிறந்தநாளுக்கு இப்பவே இணையத்தை தெறிக்கவிடும் ரசிகர்கள்; என்னன்னு நீங்களே பாருங்க!

முன்னெப்போதும் இல்லாத அளவு இப்படத்தை இந்தியாவில் பிரம்மாண்டமாக விளம்பரம் செய்து வருகிறது மார்வெல்.

ஏ.ஆர்.முருகதாஸ் வசனம், ஏ.ஆர்.ரகுமான் இசை என தமிழர்களுக்கு பரிச்சயமான பிரபலங்கள் இதில் பணியாற்றி வருகின்றனர்.

இதில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்துக்கு வாய்ஸ் கொடுத்துள்ளார். அதே போல் பிளாக் விடோ கதாபாத்திரத்துக்கு ஆண்ட்ரியா குரல் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இப்படத்தின் முன்பதிவு நேற்று தொடங்கி முதல் மூன்று நாட்களுக்கான டிக்கெட்கள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துள்ளது. தமிழ் படங்களுக்கு கூட கிடைக்காத அளவு மிகப்பெரிய அளவில் இப்படத்தின் முன்பதிவு நடைபெற்று வருவது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.