Dhanush Birthday Special
Dhanush Birthday Special

Dhanush Birthday Special – எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல், ரஜினி என தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த முன்னணி நடிகர்கள் அத்தனை பேரும் மறைமுகமாக ஒரு விஷயத்தை பதிவு செய்தே வந்திருக்கிறார்கள்.

தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பெற வேண்டும் என்றால் கம்பீர உடற்கட்டும், வசீகர தோற்றமும் வேண்டும் என்பதுதான் அது. ஆனால் புது நூற்றாண்டின் தொடக்கத்தில், தமிழ் சினிமாவின் தொன்று தொட்ட இந்த மரபை உடைத்தெறிக்கும் விதமாக அறிமுகமானவர் தனுஷ்.

ஆரம்பத்தில் இருந்தே தன்னை பின் தொடர்ந்து வரும் எதிர்ப்புகளையும் விமர்சனங்களையும் புறம்தள்ளிவிட்டு தனக்கான எல்லையை விரித்துக் கொண்டே செல்லும் தனுஷ், அதன் மூலம் ஹீரோவுக்கான இலக்கணங்களை உடைத்தெறிந்து, திறமை உள்ள எல்லோருமே ஹீரோக்கள்தான் என்பதை ஆணித்தரமாக நிருபித்துள்ளார்.

இப்படி பல இளைஞர்களின் ரோல் மாடலாக இருக்கும் தனுஷ் வரும் ஜூலை 28-ம் தேதி தனது 36-வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார்.

இதற்காக அவருடைய ரசிகர்கள் தற்போதே டிவிட்டரில் ஹேஷ் டேக் உருவாக்கி வதை டிரெண்ட் செய்து வருகிறார்கள்.

வழக்கமாக விஜய், அஜித் போன்ற நடிகர்களுக்குதான் இப்படி நடக்கும். ஆனால் தனுஷும் தற்போது அந்த வரிசையில் இணைந்துவிட்டார் போல.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here