atlee
அட்லீயின் டீவீட்டால் தளபதி 65 கதை ரெடி ஆகிடுச்சோ என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜயை வைத்து தெறி, மெர்சல் மற்றும் பிகில் என மூன்று படங்களை இயக்கியவர் அட்லீ. ஷங்கரின் உதவி இயக்குனரான அட்லீ ராஜா ராணி திரைப்படத்தின் மூலமாக இயக்குனரானார்.

இவர் இயக்கிய பிகில் படம் சமீபத்தில் 50-வது நாளை கடந்தது. ரசிகர்கள் தியேட்டர்களிலும் சமூக வளையதளங்களிலும் உற்சாகமாக கொண்டாடினர்.

இதனையடுத்து அட்லீயும் ரசிகர்களுக்கு நன்றி கூறி ட்வீட் ஒன்றை பதிவு செய்ய அதனை பார்த்த ரசிகர் ஒருவர் ராயப்பன் கதாபாத்திரத்தை மட்டும் வைத்து ஒரு கேங்ஸ்டர் படம் எடுங்க. தமிழ் சினிமாவின் சிறந்த கேங்ஸ்டர் படமாக இருக்கும் என கூறியுள்ளார்.

இதற்கு அட்லீயும் செஞ்சிட்டா போச்சி என பதிலளித்துள்ளார். அப்போ தளபதி 65 கதை ரெடியா? அட்லீ தான் மீண்டும் விஜயை இயக்க போகிறாரா? என்ற கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளன.

என்ன நடக்கிறது என பொறுத்திருந்து பார்ப்போம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.