ஜவான் படத்திற்காக அட்லீ வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Atlee Salary for Jawan Movie : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் அட்லீ. ராஜா ராணி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் வழங்கியவர் தளபதி விஜய் வைத்து தெறி, மெர்சல், பிகில் என மூன்று படங்களை இயக்கினார்.

இந்த படங்களைத் தொடர்ந்து அடுத்ததாக ஷாருக்கான் வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கினார். தமிழ் தெலுங்கு ஹிந்தி என மூன்று மொழியில் வெளியான இந்த படம் வசூல் சாதனை படைத்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்திற்காக இயக்குனர் அட்லீ ரூபாய் 60 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல் வெளியாகி ரசிகர்களை வாயடைக்க வைத்துள்ளது. ஜவான் படம் வெற்றி காரணமாக அட்லியின் சம்பளம் மேலும் உயர்த்தப்பட்டு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.