கையில் துப்பாக்கியுடன் கெத்தான லுக்கில் நயன்தாரா இருக்கும் போஸ்டர் இணையத்தில் வெளியாகியுள்ளது.
தென்னிந்திய சினிமாவில் ராஜா ராணி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. இந்த படத்தை தொடர்ந்து இவர் தளபதி விஜயை வைத்து தெறி, மெர்சல் மற்றும் பிகில் என மூன்று படங்களை இயக்கினார்.
அதனை தொடர்ந்து தற்போது ஷாருக்கான் வைத்து பாலிவுட் சினிமாவின் ஜவான் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்க பிரியங்கா சோப்ரா, பிரியாமணி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இதுவரை ஷாருக்கான் லுக் மட்டுமே இந்த படத்தில் இருந்து வெளியாகி இருந்த நிலையில் தற்போது முதல்முறையாக நயன்தாராவின் போஸ்டர் வெளியாகி உள்ளது.
கையில் துப்பாக்கி உடன் செம கெத்தான லுக்கில் இருக்கும் இந்த போஸ்டர் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.