தந்தையின் பிறந்தநாளில் அதர்வா போட்ட எமோஷனல் பதிவு

Atharvaa About Murali Birthday : பெங்களூருவை பூர்வீகமாகக் கொண்டவர் நடிகர் முரளி. கன்னட படங்களில் நடித்து வந்த இவர் தமிழில் பூவிலங்கு என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதன் பின்னர் தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து வந்த முரளி ஹீரோவாகவும் குணச்சித்திர நடிகராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வந்தார்.

லாக் டவுனிலும் நாயுடன் தம்மாத்துண்டு உடையில் வாக்கிங் செல்லும் மகத் மனைவி – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

மேலும் ஷோபா என்பவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு அதர்வா, காவியா, ஆகாஷ் என 2 மகன் ஒரு மகள் பிறந்தனர்.

கடந்த 2010ஆம் ஆண்டு செப்டம்பர் எட்டாம் தேதி இவர் உயிரிழந்தார். தற்போது இவருக்கு பிறந்த நாள் என்பதால் அதர்வா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அப்பாவைக் குறித்து பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் நீங்கள் மிகவும் கூலான மற்றும் வலிமையான மனிதர். அது எங்களுக்கு தெரியும். நாங்கள் உங்களை மிகவும் விரும்புகிறோம், மிஸ் செய்கிறோம் என கூறியுள்ளார்.