Asuran update
Asuran update

Asuran update : தனுஷ் வெற்றிமாறன் கூட்டணி நான்காவது முறையாக இணைந்திருக்கும் படம் அசுரன்.

கொடி படத்தை தொடர்ந்து இப்படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். பூமணியின் வெக்கை எனும் நாவலை தழுவி இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது.

விஜய் சேதுபதியுடன் துணிந்து மோதும் இரண்டு பிரபலங்கள் – யார் யார் தெரியுமா?

தமிழ் சினிமாவின் பிஸி நடிகரான ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

இப்படம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அப்டேட் செய்து வந்த ஜி.வி, அதில் தன்னுடைய ஃபேவரிட் பாடலாசிரியர் ஏகதேசி இப்படத்தில் சில பாடல்களை எழுதி இருப்பதாக தெரிவித்திருந்தார்.

கடைசியாக இந்த கூட்டணி இணைந்த ஆடுகளம் படத்திலும் இவர் ஒத்த சொல்லால என்னும் ஹிட் பாடலை எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதைதொடர்ந்து தற்போது இப்படம் குறித்த இன்னொரு தகவல் வெளிவந்துள்ளது. அதாவது இப்படத்தின் முதல் ஷெட்யூல் முடிந்து இரண்டாவது ஷெட்யூல் தொடங்கியுள்ளதாம்.

இதில் மகன் தனுஷ் போர்ஷன் கோவில்பட்டியில் படமாக்கப்பட உள்ளதாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here