Asuran Teaser :
Asuran Teaser : இப்படத்தின் டீசரை தனுஷ் பிறந்தநாள் ஸ்பெஷலாக வரும் ஜூலை 25ம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி நான்காவது முறையாக இணைந்திருக்கும் படம் அசுரன்.
கொடி படத்தை தொடர்ந்து இப்படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். பூமணியின் வெக்கை எனும் நாவலை தழுவி இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது.
அடா டேய்.. கமலையே மாத்தி பேச வச்சிடீன்களே – பிக் பாஸ் ப்ரோமோவால் ரசிகர்கள் கோபம்.!
தமிழ் சினிமாவின் பிஸி நடிகரான ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு அண்மையில் தொடங்கியதாக நாம் சொல்லியிருந்தோம்.
அதற்குள் இதன் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவுக்கு வருகிறது. அதாவது ஜூன் 15ம் தேதியுடன் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவடைகிறது.
இதைத் தொடர்ந்து இப்படத்தின் டீசரை தனுஷ் பிறந்தநாள் ஸ்பெஷலாக வரும் ஜூலை 25ம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.