Aruva
அருவா படம் பற்றி படத்தின் தயாரிப்பாளர் பேசிய பேச்சுகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Aruvaa Movie Secrets : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா, இவர் சூரரை போற்று படத்தில் நடித்திருப்பதை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்திலும் ஹரி இயக்கத்தில் அருவா படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அருவா படத்தின் மூலமாக ஹரியும் சூரியாவும் இணைவது ஆறாவது முறை, தற்போது இந்த அருவா படத்தின் தயாரிப்பாளர் கே ஞானவேல் ராஜா அளித்துள்ள பேட்டி ஒன்றில் அருவா படம் பற்றி பேசியுள்ளார்.

பிரேக்கிங் : தளபதி 65 இயக்குனர், தயாரிப்பாளர், ரிலீஸ் எப்போ? – லேட்டஸ்ட் தகவல் இதோ.!

அருவா படம் அண்ணன் தம்பி பாசத்தை அடிப்படையாக கொண்ட குடும்ப செண்டிமெண்ட் படம் தான். குறிப்பாக வேல் மற்றும் கடைக்குட்டி சங்கம் இந்த இரண்டு படங்களின் கலவை போல அசத்தலாக இருக்கும்.

தற்போது நடிகர் நடிகர்களுக்கான தேர்வு நடந்து வருகிறது. அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்கி ஒரே கட்டமாக முடியும். தீபாவளிக்கு படம் ரிலீஸ் என குறிப்பிட்டுள்ளார்.

குடும்ப செண்டிமெண்ட் படம் என்பதால் இந்த படத்தில் மக்கள் மத்தியில் அதிகம் பேசப்படும் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.