அருண் விஜய்யின் புதிய படமான யானை படத்தில் இருந்து வீடியோ கிளிப்ஸ் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்களுக்கு இப்படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் அருண் விஜய். இவர் பிரபல நடிகரான விஜயகுமாரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் அருண் விஜயின் நடிப்பில் வெளியான “O My Dog” திரைப்படம் ரசிகர்களின் இடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

வைரல் ஆகிவரும் அருண் விஜயின் புதிய வீடியோ - எதிர்பார்ப்போடு ரசிகர்கள்.

இதனை தொடர்ந்து அருண் விஜய் அவர்கள் இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகி இருக்கும் “யானை” திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இதில் இவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் யோகிபாபு, பிரகாஷ் ராஜ், ராதிகா, தலைவாசல் விஜய், குக் வித் கோமாளி புகழ், அம்மு அபிராமி ஆகியோர் நடித்துள்ளனர்.ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு கோபிநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

வைரல் ஆகிவரும் அருண் விஜயின் புதிய வீடியோ - எதிர்பார்ப்போடு ரசிகர்கள்.

இந்த “யானை” திரைப்படம் ஜூலை 1 ஆம் தேதியான நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்திற்கான  கிளிப்ஸ் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் இந்த வீடியோ ரசிகர்களின் இடையே இப்படத்திற்கான  எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தி உள்ளது.

Yaanai - New Glimpse | Hari | Arun Vijay | Priya Bhavani Shankar | GV Prakash | Drumsticks