மாவீரன் படம் பற்றி அருண் விஜய் போட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமாகி அதன் பின்னர் காமெடி நடிகராக திரை உலகின் அறிமுகம் ஆகி தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக பலம் வந்து கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன்.

இவரது நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்றுள்ள திரைப்படம் மாவீரன். நான்கு நாளில் 50 கோடி வசூலை பெற்று ரசிகர்கள் மத்தியில் பெரும் வெற்றியை பெற்றுள்ள இந்த திரைப்படம் குறித்து அருண் விஜய் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதாவது மாவீரன் படத்தைப் பார்த்ததாகவும் சிவகார்த்திகேயன் அருமையான நடிப்பை வெளிப்படுத்த யோகி பாபுவின் காமெடி மற்றும் விஜய் சேதுபதியின் வாய்ஸ் ஓவர் ரசிக்க வைப்பதாகவும் தெரிவித்து இயக்குனர் மற்றும் பல குழுவினருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

இவருடைய இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி சிவகார்த்திகேயன் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.