விவசாய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்கள் என் அப்பாவும் அம்மாவும் என அருண் விஜய் குடும்ப புகைப்படத்தை வெளியிட்டு பெருமிதம் அடைந்து உள்ளார்.

Arun Vijay in Family Photo : தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகராக வலம் வருபவர் விஜயகுமார். இவரின் ஒரே மகன்தான் அருண் விஜய். தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக பல போராட்டங்களுக்குப் பிறகு ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

விவசாய குடும்பத்தில் பிறந்தவர்கள் என் அப்பாவும் அம்மாவும்.. அழகிய குடும்ப புகைப்படத்தை வெளியிட்டு அருண்விஜய் பெருமிதம்

வாரிசு நடிகராக சினிமாவில் அறிமுகமாகி இருந்தாலும் தன்னுடைய விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கையால் இன்று தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார். தொடர்ந்து நல்ல நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இவர் தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் குடும்ப புகைப்படம் ஒன்றை அளித்துள்ளார். மேலும் அந்தப் பதிவில் தஞ்சை மாவட்டத்தின் கிராமங்களில், ஒரு விவசாய குடும்பத்தில் இருந்து பிறந்து வளர்ந்தவர்கள் எனது தந்தையும் தாயும் என்பதில் பெருமை அடைகிறேன். தமிழன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்!!💪🏼🙏🏼 நமது கலாச்சாரத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துரைப்போம்..#myculturemypride என தெரிவித்துள்ளார்.