யுத் ஒலிம்பிக் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் 3-ஆம் இடம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்கள் பெரிய ஏமாற்றம் அடைந்தனர்.

இந்த பிரிவில் விளையாடிய அர்ச்சனா ருமேனிய வீராங்கனையிடம் 1-4 என்ற வித்தியாசத்தில் தோற்றார். மேலும் இந்திய மகளிர் ஹாக்கி அணி போட்டியில் சிறப்பாக விளையாடி காலிறுதிக்கு சென்றது.

சிறப்பாக விளையாடிய போதிலும் அர்ஜென்டினா அணியிடம் 2-5 என்ற கணக்கில் தோற்றது. இந்திய அணியில் மும்தாஸ் மற்றும் ரீத் மட்டுமே கோல் அடித்தனர்.

இதில் ரசிகர்களுக்கு சிறிது மகிழ்ச்சி அளித்த சம்பவம் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி தொடர்ந்து மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று காலிறுதிக்கு சென்றுள்ளது மட்டுமே .

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.