ராஜா ராணி 2 சீரியல் நடிகை அர்ச்சனாவின் புதிய ரிலீஸ் வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஒரே மாதிரியான கேள்வியை கேட்டு இதனை வைரலாக்கி வருகின்றனர்.

சின்னத்திரையில் பிரபல நடிகையாக திகழ்பவர்தான் vjஅர்ச்சனா. இவர் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக கூடிய ‘ராஜா ராணி சீசன் 2’ என்ற சீரியலில் பயங்கரமான வில்லி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருகிறார். இதற்காக இவர் சிறந்த வில்லி என்ற விருதையும் அண்மையில் பெற்றிருந்தார்.

அதற்குப் பின் சில மாதங்களாகவே vjஅர்ச்சனாவுடன் அதே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக கூடிய பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதி கதாபாத்திரத்தில் நடிக்கும் அருண் பிரசாத் இருவரும் காதலித்து வருவதாகவும், ரகசியமாக எங்கேஜ்மென்ட் செய்துள்ளதாகவும் சில தகவல்கள் வெளியாகி வைரலானது.

இதற்கிடையில் vj அர்ச்சனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் ரிலீஸ் வீடியோக்களை பதிவிட்டு கொண்டிருப்பார். அதேபோல் தற்போது வெளியிட்டிருக்கும் ரிலீஸ் வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஒரே மாதிரியான பதிலை கமெண்டில் தெரிவித்து வருகின்றனர்.

அதாவது அந்த ரிலீஸ் வீடியோவில் vj அர்ச்சனா பஞ்சதந்திரம் படத்திலிருந்து வரும் ஒரு பாடலை ரீல்ஸ் வீடியோவாக செய்து இருக்கிறார். அதில் ‘உன்னோடு காதல் என்று ஊர் சொன்னது’ என்ற வரிக்கு அனைத்து ரசிகர்களும் அருண் தான் என்ற பெயரை வைத்து ஒரே மாதிரியான கமெண்டை பதிவு செய்து வருகின்றனர். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.