தளபதி 68 படம் பற்றி தயாரிப்பாளர் அதிரடி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் லியோ என்ற திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் திரைக்கு வந்து கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
இந்த படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 68 படத்தில் நடிக்க உள்ளார். அர்ச்சனா கல்பாத்தி தயாரிப்பில் உருவாக உள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார்.
ஏற்கனவே இந்த படத்தின் அப்டேட்டுகள் லியோ ரிலீஸ்க்கு பிறகு வெளியாகும் என வெங்கட் பிரபு தெரிவித்த நிலையில் தற்போது அர்ச்சனா கல்பாத்தி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் நாம ஆரம்பிக்க வேண்டிய நேரம் இது என வெங்கட் பிரபுவுக்கு டேக் செய்துள்ளார்.
இதோ அந்த பதிவு