கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படத்தில் நடிக்கும் ஹன்சிகாவிற்கு வில்லனாக ஆரி நடிக்க உள்ளார். இந்த தகவல் ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் ஹன்சிகா மோத்வானி. இவர் பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக இணைந்து நிறைய படங்கள் நடித்திருந்தார். ஆனால் தற்போது ஹன்சிகா கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

அந்த வகையில் தொடர்ந்து நான்கு படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் இவர் மேலும்  அதே கதை அம்சத்தில் இருக்கும் இன்னொரு  படத்திலும் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்தப்படத்தை இயக்குனர் இகோர் இயக்க இருக்கிறார். 

இந்த படத்தில் மாயா, நெடுஞ்சாலை போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கும் ஆரி ஹன்சிகாவிற்கு வில்லனாக நடிக்க உள்ளார். இந்த தகவல் ரசிகர்களின் இடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.