Annaththe Vs Enemy Reviews Details

ரஜினியை பின்னுக்கு தள்ளி விஷாலின் எனிமி திரைப்படம் சாதனை படைத்துள்ளது.

Annaththe Vs Enemy Reviews Details : தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகிய அண்ணாத்த திரைப்படம் தீபாவளி விருந்தாக நவம்பர் 4ஆம் தேதி வெளியானது.

https://kalakkalnews.com/sports/action-theri-match-how-did-india-defeat-afghanistan-pitch/cid5702078.htm

இந்த படத்துடன் விஷால் மற்றும் ஆர்யா நடிப்பில் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் உருவாகி இருந்த எனிமி என்ற திரைப்படம் வெளியானது.

Annaatthe விட Enemy நல்லா இருக்கு – Enemy Day 2 Public Review | VIshal, Arya, Mirnalini Ravi | HD

அண்ணாத்த மற்றும் எனிமி இரண்டு திரைப்படங்களின் வசூல் ரீதியாக வெற்றி பெற்றிருந்தாலும் விமர்சனரீதியாக அண்ணாத்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. திருப்பாச்சி, வேதாளம் மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்களின் கலவையாக அண்ணாத்த திரைப்படம் இருப்பதாக கூறி வருகின்றனர்.

ஆனால் எனிமி திரைப்படம் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி அடைந்துள்ளது. விஷால் மற்றும் ஆர்யா என இருவரும் மோதிக் கொள்ளும் சண்டைக்காட்சிகள் செம த்ரில் ஆக இருப்பதாக விமர்சனங்கள் கூறுகின்றன. படம் எதிர்பார்த்ததை விடவும் சிறப்பாக வந்திருப்பதாக தெரிவிக்கின்றனர். இதனால் அண்ணாத்த திரைப்படத்தை விமர்சன ரீதியாக பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளது விஷாலின் எனிமி திரைப்படம்.