Annaththe Leaked in Tamil Rockers

அண்ணாத்த திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியான நிலையில் இன்று தமிழ் ராக்கர்ஸில் லீக் ஆகியுள்ளது.

Annaththe Leaked in Tamil Rockers : தென்னிந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் தீபாவளி விருந்தாக நேற்று உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் அண்ணாத்த. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இமான் இசையில் உருவாகி இருந்த இந்தப் படத்தை சிறுத்தை சிவா இயக்கி உள்ளார்.

பாசிமாலை் அணிவித்து, நரிக்குறவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் : முதலமைச்சர் ஸ்டாலின்

படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்க கீர்த்தி சுரேஷ் ரஜினிக்கு தங்கையாக நடித்துள்ளார். மேலும் குஷ்பு, மீனா, சூரி, சதீஷ் என பலர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‌‌

நேற்று திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த திரைப்படம் முதல் நாளில் தமிழகத்தில் ரூபாய் 25 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

படம் வெளியாகி ஒரு நாள் மட்டுமே முடிந்துள்ள நிலையில் தமிழ் ராக்கர்ஸில் இந்த திரைப்படம் லீக் ஆகி இருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

Free-ஆ Ticket கொடுத்த கூட படத்துக்கு வராதீங்க! – Annaatthe Day 2 Public Review | Rajini, Nayanthara