Annathae
Annathae

அண்ணாத்த திரைப்படம் எப்போது வெளியாகும் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

Annathae Movie Release Update : தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகிவரும் அண்ணாத்த திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஓரளவுக்கு நடந்து முடிந்த நிலையில் கொரானா வைரஸ் தொற்று காரணமாக தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் இன்று நவம்பர் மாதத்தில் தொடங்க உள்ளது. அண்ணாத்த திரைப் படத்தை தீபாவளிக்கு வெளியிட இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Rajinikanth Conditions to Annathae Team

ஆனால் அதற்கு தற்போது துளியும் சாத்தியமில்லை என்பதால் இந்த படம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நவம்பர் மாத படப்பிடிப்பில் ரஜினி இல்லாத காட்சிகள் தான் படமாக்கப்பட உள்ளது.

இதனால் இப்படம் பொங்கலுக்கும் வெளியாகாது என கூறப்படுகிறது. மேலும் இந்த திரைப்படத்தை படக்குழு தமிழ் புத்தாண்டன்று வெளியிட முடிவு செய்து இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.

இதனால் தீபாவளி அல்லது பொங்கல் ரிலீசாக அண்ணாத்த திரைப்படத்தை எதிர்பார்த்த ரஜினி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.