Anbumani Ramadoss Press Meet
Anbumani Ramadoss Press Meet

Anbumani Ramadoss Press Meet – சென்னை: தமிழகத்தில் அரசியல் சூழல் மாறியதால் தான் அதிமுகவுடன் கூட்டணி வைத்ததாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூட்டணி குறித்த ரகசியத்தை போட்டுடைத்தார்.

கடந்த சில ஆண்டுகளாக அதிமுகவை கடுமையாக விமர்சித்து வந்த பாமக திடீரென அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் கூட்டணியில் இணைந்த பாமகவிற்கு அதிமுக 7 மக்களவை சீட்டும், 1 மாநிலங்களவை சீட்டும் ஒதுக்கியுள்ளது.!

இந்நிலையில் கூட்டணி தொடர்பாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளுடன் பாமக கூட்டணி சேர மாட்டோம் என சொன்னது உண்மைதான், அதை நாங்கள் மறுக்கவில்லை.

ஆனால் 2011-ல் சொன்னபோது இருந்த சூழல், தற்போது இல்லை(?!) ஆதலால் அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளோம் என்று கூறினார்.

மேலும் நிர்வாகிகளை ஆலோசித்து கூட்டு முடிவின்படி அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம். மேலும் 10 அம்ச கோரிக்கைகளை முதல்வரிடம் வழங்கி உள்ளோம்.

அதில் விவசாய கடன் ரத்து, ஹைட்ரோ கார்பன், நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட திட்டங்கள் வரக்கூடாது என்ற கோரிக்கையை பரிசீலப்பதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி,அதிமுக உடன் வைத்துள்ள கூட்டணியால் பாமகவின் கொள்கையை விட்டுக்கொடுக்க மாட்டோம்.

பாமக அளித்த ஊழல் புகார் குறித்து ஆளுநர் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பார்.

மேலும் விமர்சனம் செய்தால் கூட்டணி வைக்கக் கூடாதா என்ன? என கேள்வி எழுப்பினார்.