Browsing tag

womens

முதன்முறையாக, நடிகை ஸ்வேதா மேனன் வரலாற்றுச் சாதனை..

மலையாளத்தில் பிரபலமான நடிகையாக திகழும் ஸ்வேதா மேனன், தமிழ் சினிமால் அரவாண், நான் அவனில்லை 2, சிநிகிதியே, துணை முதல்வர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்தியிலும் நடித்திருக்கிறார். இதனிடையில் நடிகை ஸ்வேதா மேனனுக்கு எதிராக வழக்கும் தொடரப்பட்டது. ஆபாச படங்களில் நடித்ததாகவும், விளம்பரங்களில் நிர்வாண போஸ் கொடுத்ததாகவும் புகார்கள் எழுந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பாக அவர் நடித்த ரதி நிர்வேதம், பாலேரி மாணிக்கம் உள்ளிட்ட படங்களிலும், காமசூத்ரா விளம்பரத்திலும் ஆபாச காட்சிகளில் நடித்ததாக ஸ்வேதா மேனனுக்கு எதிராக […]

தினமும் 12 மணிநேரம் வேலை செய்யத் தயார்: நடிகை வித்யாபாலன் ஓபன் டாக்..

தெலுங்கு இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா அடுத்து இயக்கும் படம், ‘ஸ்பிரிட்’. இப்படத்தில், தீபிகா படுகோன் முதலில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால், தினமும் 8 மணி நேரத்துக்குமேல் படப்பிடிப்பில் பங்கேற்க வேண்டும் என்பதால், அதிலிருந்து வெளியேறினார். இந்த விவகாரம் இந்தி சினிமாவில் பரபரப்பாகப் பேசப்பட்டது. இதையடுத்து, புதிதாகக் குழந்தை பெற்றுள்ள தாய்மார்களுக்கு சினிமாவில் வேலை நேரம் குறித்து விவாதம் எழுந்துள்ளது. இது குறித்து, நடிகை வித்யா பாலன் தெரிவிக்கையில், ‘எனக்கு ஒரு நாளைக்கு 12 மணிநேரம் வேலை […]

வெற்றிமாறன் தயாரித்த ‘பேட் கேர்ள்’ படம் ரிலீஸ் அறிவிப்பு..

வெற்றிமாறன் மற்றும் அனுராக் கஷ்யாப் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘பேட் கேர்ள்’. இதன் டீசர் பெரும் சர்ச்சையை உருவாக்கியது. இணையத்தில் பலரும் இதனை கடுமையாக விமர்சித்தார்கள். இதற்கு ஆதரவும், எதிர்ப்பு ஒரே சேர இருந்தன. தற்போது இப்படத்தின் வெளியீட்டு தேதியினை படக்குழு அறிவித்துள்ளது. செப்டம்பர் 5-ம் தேதி ‘பேட் கேர்ள்’ திரைப்படம் வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. விரைவில் படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகளையும் தொடங்கவுள்ளது. முன்னதாக, இப்படம் பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு விருதுகளை […]

கீர்த்தி சுரேஷ் நடித்த ‘ரிவால்வர் ரீட்டா’ படத்தின் அப்டேட்ஸ்

‘ரிவால்வர் ரீட்டா’ படத்தின் தகவல்கள் காண்போம்.. நடிகை கீர்த்தி சுரேஷ் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து உச்ச நடிகையாக வலம் வந்தார். பின்னர் காதல் திருமணம் செய்து இல்லற வாழ்க்கையில் நுழைந்தார். அந்நிலையில் பாலிவுட்டில் வெளியான் ‘பேபி ஜான்’ படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இப்படத்தை இயக்குனர் அட்லி தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்.,உமன் சென்ட்ரிக் படங்களை அதிகம் நம்பி வரும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி உள்ள ‘ரிவால்வர் ரீட்டா’ படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. […]

அடுத்த மாதம் ரிலீஸாகும் ‘குயிலி’ படத்தின் கதை என்ன தெரியுமா?

‘குயிலி’ படத்தின் கதை பற்றிப் பார்ப்போம்.. அறிமுக இயக்குனர் ப.முருகசாமி இயக்கத்தில் லிசி ஆண்டனி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம், ‘குயிலி’. இப்படத்தில் ரவி சா, தாஷ்மிகா, தீப்தி, புதுப்பேட்டை சரவணன், ராட்சசன் சரவணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பிரவீண் ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு ஜூ ஸ்மித் இசையமைக்க, அருண்குமார் தயாரித்துள்ளார். ‘குயிலி’ படம் பற்றி இயக்குனர் ப.முருகசாமி தெரிவிக்கையில், ‘இயக்குனர் பாலாஜி சக்திவேலிடம் பணியாற்றிவிட்டு இந்தப் படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறேன். மதுவுக்கு […]

தீபிகா படுகோனே விலகிய விவகாரத்தில், சந்தீப் ரெட்டிக்கு மணிரத்னம் அறிவுறுத்தல்..

சந்தீப் ரெட்டி படத்திலிருந்து தீபிகா விலகியதற்கு இயக்குநர் மணிரத்னம் ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்த தகவல்கள் காண்போம்.. சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கவுள்ள ‘ஸ்பிரிட்’ பட ஹீரோயினியாக ஒப்பந்தமாகி பின்பு விலகிவிட்டார் தீபிகா படுகோனே. அவருக்கு பதிலாக திருப்தி டிம்ரி இணைந்துள்ளார். தீபிகா விலகலுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டது. அது பரபரப்பானது. இதனையடுத்து, இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்கா தனது எக்ஸ் பக்கத்தில் தீபிகாவை மறைமுகமாக சாடியிருந்தார். தனது எக்ஸ் தள பதிவில், ‘நான் ஒரு நடிகரிடம் […]

அனுஷ்கா நடித்த ஆக்‌ஷன் ஜானர் படம்; ரிலீஸ் தேதி அறிவிப்பு..

நடிகைகளை பொறுத்தவரையில் 35 வயதை கடந்துவிட்டால், பெரும்பாலும் ஹீரோயின் வாய்ப்புகள் குறைவது இயல்பு என்பது தெரிந்ததே. அவ்வகையில், சமந்தா தனக்கேற்ற முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரம் வந்தால் நடிக்கிறார். வெப் சீரிஸிலும் ஆக்‌ஷனாக மிரட்டி வசீகரிக்கிறார். அதுபோல, அனுஷ்கா ஷெட்டியும் தற்போது மிகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். அவர் கடைசியாக நடித்த ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் போலிஷெட்டி’ படம் வெளியாகி 2 ஆண்டுகள் ஆகின்றன. தற்போதுதான் ‘காட்டி’ படம் மூலம் கம்பேக் கொடுக்கவுள்ளார். இப்படத்தில், அனுஷ்காவை […]

எனக்கொரு முத்தம் தருவாயா?: நடிகை மாளவிகா பகிர்ந்த அதிர்ச்சி சம்பவம்

மர்மநபர் ஒருவர் தன்னிடம் முத்தம் கேட்ட சம்பவத்தை மாளவிகா மோகனன் கூறியுள்ளார். இது குறித்த அவரது நினைவலைகள் பார்ப்போம்.. மாளவிகா மோகனன் தமிழ் சினிமாவை தொடர்ந்து மலையாளம் படங்களிலும் நடித்துள்ளளார். மேலும், பாலிவுட்டிலும் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து, விரைவில் பிரபாசின் ‘தி ராஜா சாப்’ படத்தின் மூலம் தெலுங்கிலும் அறிமுகமாக இருக்கிறார். மலையாளத்தில், சத்யன் அந்திக்காட் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் ‘ஹிருதயபூர்வம்’ படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில், மும்பையில் கல்லூரி படித்தபோது சந்தித்த சம்பவத்தை மாளவிகா மோகனன் […]

‘ஆராத்யா’ போல பல பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம்: ராம் கோபால் வர்மா வாய்ஸ்

சோஷியல் மீடியா மற்றும் பெண்களின் நிலை பற்றி அலசும் ‘சாரி’ திரைப்பட அப்டேட் பார்ப்போம்.. ரவிசங்கர் வர்மா தயாரிப்பில், இயக்குனர் ராம் கோபால் வர்மா திரைக்கதையில், கிரி கிருஷ்ணா கமல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சாரி’. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஏப்ரல் 4-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படம் பற்றி நடிகை ஆராத்யா தேவி பேசுகையில், ‘நான் கேரளா பொண்ணு. ‘சாரி’ படத்தின் டிரெய்லர், பாடல்கள் அனைத்தும் உங்களுக்கும் பிடித்திருக்கும் என […]

ஆபாச வீடியோ வெளியாகி பரபரப்பு: நடிகை ஸ்ருதி கடும் சீற்றம்

தன்னை பற்றி வெளியான ஆபாச வீடியோ தொடர்பாக ஸ்ருதி நாராயணன் கடுங்கோபத்தில் குமுறிய தகவல்கள்.. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ என்ற சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகை ஸ்ருதி நாராயணன். இந்நிலையில், அவரது அந்தரங்க வீடியோ என ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. அதையடுத்து தனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்டை ப்ரைவேட்டுக்கு மாற்றிய ஸ்ருதி, யாருக்கும் பெரிதாக பதில் அளிக்காமல் இருந்து வந்தார். சமீபத்தில் அவர் தனது இன்ஸ்டால்கிராம் கணக்கை பப்ளிக்கிற்கு […]