Browsing tag

students

தமிழக அரசின் மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்திற்கு, விஜய் சேதுபதி- கார்த்தி நன்றி..

‘உலகம் உங்கள் கையில்’ எனும் பெயரில் லேப்டாப் திட்டத்தை நந்தம்பக்கம் வர்த்தக மையத்தில் கல்லூரி மாணவர்களின் வளர்ச்சிக்காக மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கல்லூரி மாணவர்களின் திறன் வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் முன்னேற்றத்துக்காக 10 லட்சம் மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், நடிகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அரசு பொறியியல், கலை அறிவியல், மருத்துவம், விவசாயம் உள்ளிட்ட துறைகளை சார்ந்த மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட்டது. நடிகர் விஜய் சேதுபதி […]

மாணவர்களுக்கு நடிகர் கவின் அறிவுறுத்தல்..

தி ஷோ மஸ்ட் கோ அன் மற்றும் பிளாக் மெட்ராஸ் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள ‘மாஸ்க்’ திரைப்படம், வெற்றிமாறன் மேற்பார்வையில் நடைபெற்று முடிந்து இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. வெளியாது. வி.கர்ணன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் கவின், ஆண்ட்ரியா, ருஹானி சர்மா உள்பட பலர் நடித்துள்ளனர். இதற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதன் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கவின் பேசும்போது, ‘என்னுடைய ‘மாஸ்க்’ திரைப்படம் […]

எனது வீட்டை பள்ளியாக மாற்றி, இலவசக்கல்வி கொடுக்க திட்டம்: ராகவா லாரன்ஸ் முடிவு

தமிழ் சினிமாவில் முனி, கஞ்சனா 2, காஞ்சனா 3 என திரில்லர் படங்களில் நடித்துள் ராகவா லாரன்ஸ், தற்போது காஞ்சனா- 4 படத்தில் நடிக்கிறார். சினிமா தவிர்த்து தன்னால் முடிந்தளவிற்கு லாரன்ஸ் டிரஸ்ட் மூலமாக ஏராளமான உதவிகளை செய்து வருகிறார். குறிப்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி வருகிறார். இந்நிலையில், தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு அதில், காஞ்சனா 4 படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. எப்போதும் படத்திற்கு அட்வான்ஸ் வாங்கினால், அதிலிருந்து குறிப்பிட்ட தொகையை ஒரு நல்ல […]

இயக்குனர் அட்லீ சொன்ன குட்டிக்கதை: வைரலாகும் நிகழ்வு

கோலிவுட் முதல் பாலிவுட்வரை முத்திரை பதித்த அட்லீ இயக்கத்தில் அடுத்து உருவாகவுள்ள படமான அல்லு அர்ஜுன் படத்தின் ப்ரீ புரடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அவர் படித்த சத்யபாமா கல்லூரியில் அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. அப்போது அவர் பேசிய அனுபவப் பேச்சு தற்போது வைரலாகி தெறிக்கிறது. அவர் பேசியதாவது: ‘இந்த கல்லூரியில் சேர்ந்த முதல் ஐந்து நாட்களிலேயே ஷார்ட் பிலிம் எடுக்கிறேன், கேமரா வேண்டும் என்று கேட்டேன். இந்த கல்லூரியின் தாளாளர் எடுத்துக்கோபா, […]

உடல் எடையைவிட, மன ஆரோக்கியமே முக்கியம்: விஜய் சேதுபதி உத்வேக பேச்சு..

விஜய் சேதுபதி தற்போது சற்று ஸ்லிம்மாக காட்சியளிக்கிறார். தனது எடை குறித்த சுவாரஸ்யமான தகவலையும் பகிர்ந்து கொண்டார். இது குறித்துப் பார்ப்போம்.. மாணவர் ஒருவர் விஜய் சேதுபதியின் உடல் எடை குறைப்பு பற்றி கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த விஜய் சேதுபதி, ‘எடை பார்க்கும் எந்திரத்தை நான் தொடுவதே இல்லை. ஏனென்றால், அதில் உள்ள எண்கள் என்னை மிகவும் சோர்வடையச் செய்யும்’ என நகைச்சுவையாக கூறினார். மேலும், ‘எனக்கு எவ்வளவு எடை இருக்கிறது என்பதை விட, நான் […]

தனியாக அழுதுகொண்டே இருப்பேன்: நடிகை சானியா ஐயப்பன் ஃபீலிங்ஸ்

‘நெகட்டிவ்வான வார்த்தைகள் காயப்படுத்தும். பாஸிட்டிவ்வான வார்த்தைகள் வளர்ச்சிக்கு உதவும்’ என்பது அனைவருக்கும் பொருந்தும்தானே. அந்நிலையில்தான் கண்கலங்கி இருக்கிறார் போலும் சானியா.. அதாவது, மலையாள சினிமாவில் ‘குயின்’ படம் மூலம் அறிமுகமான 22 வயது சானியா ஐயப்பன் பிரேதம்-2, லூசிபர், சல்யூட் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். தமிழிலும் இறுகப்பற்று, சொர்க்கவாசல் போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார். இந்நிலையில், லண்டனில் உள்ள ஒரு நடிப்புப் பள்ளியில் படித்தபோது எதிர்கொண்டதை சானியா தெரிவிக்கையில், ‘நான் லண்டனில் படிக்கச் சென்ற முதல் நாளிலிருந்தே […]

நடிகர்-கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹுசைனி மறைவு; உருவச்சிலை இன்று திறப்பு

தனது இறப்பின் காலம் நெருங்குவதை தெரிந்தும், மிகுந்த தன்னம்பிக்கையுடன் உரையாடியவர் ஷிகான் ஹுசைனி, இன்று மறைந்தார். இது பற்றிய நெஞ்சு கனக்கும் நிகழ்வுகள்.. விஜய் நடிப்பில் ‘பத்ரி’ மற்றும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ போன்ற படங்களில் நடித்த புகழ்பெற்ற கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹுசைனி, ரத்தப்புற்று நோயால் பாதிக்கப்பட்டு, இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருடைய மறைவிற்கு ரசிகர்களும் திரையுலகினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஷிகான் ஹுசைனி, சென்னையில் கராத்தே மற்றும் வில்வித்தை பயிற்சிக் கூடம் […]

விஜய் தேவரகொண்டா, நிதி அகர்வால் உள்பட 25 பேர் மீது எஃப்ஐஆர்..

தெலுங்கு திரையுலக பிரபலங்கள் 25 பேர் மீது பெட்டிங் ஆப்களில் விளம்பரம் செய்த குற்றத்துக்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரம்மி விளையாட்டுகள் போன்ற பல பெட்டிங் ஆப்கள் இளைஞர்களின் பணத்தை சூறையாடி அவர்களை தற்கொலை செய்யும் அளவுக்கு தூண்டுகிறது. ‘மதுவினால் வரும் போதைபோல’ விரைவில் பணம் சம்பாதித்து விடலாம் என்கிற போதையை சில முன்னணி நடிகர்களே காசுக்காக விளம்பரப்படுத்தி, ரசிகர்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்கின்றனர் என ஹைதராபாத்தை சேர்ந்த […]

அனைத்து பள்ளிகளிலும் ஒரே கொள்கை இருக்க வேண்டும்: இயக்குனர் பேரரசு வலியுறுத்தல்

நாட்டில் ‘சமதர்மம்’ ஏற்பட வேண்டும் என பேரரசு பேசியுள்ளார். இது பற்றிய விவரம் காண்போம்.. ’தெய்வத்திருமகள்’, ’மதராசப்பட்டினம்’, ’சைவம்’ படங்களின் இயக்குனரான ஏ.எல். விஜய் டி ஸ்டுடியோ போஸ்ட் (D Studios Post) என்ற பெயரில் புதிய போஸ்ட் புரொடக்சன் ஸ்டுடியோ தொடங்கியுள்ளார். இதன் திறப்பு விழாவில் திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இயக்குனர் பேரரசு செய்தியாளர்களை சந்தித்து, தற்போது பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வரும் மும்மொழிக் கொள்கை பற்றியும் கருத்து தெரிவித்தார். அவர் பேசியதாவது: […]

இந்திய சினிமாவில் புதிய ரெக்கார்டு படைத்து நடிகர் பிரதீப் சாதனை

‘சிறு துளி பெரு வெள்ளம்’ என்பது போல, குறும்படத்தில் தொடங்கிய ஆர்வம் இன்று சாதனைச் சமுத்திரமாகி இருக்கிறது. இது குறித்த தகவல்கள் காண்போம்.. முன்னதாக, பிரதீப் ரங்கநாதன் இயக்கிய குறும்படம் ஒன்றை பார்த்தவர்கள் பலரும் ஹீரோவாக நடித்தவரை பாராட்டி இருக்கிறார்கள். இயக்கிய தனக்கு பாராட்டு கிடைக்காததால், ஹீரோவாக வேண்டும் என முடிவெடுத்து, முதலில் இயக்குனராக தன் திறமையை நிரூபிக்க ‘கோமாளி’ படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் வெற்றிக்கு பின்னர், தான் இயக்கிய ‘அப்பா லாக்’ குறும்படத்தை ‘லவ் டுடே’ […]