புற்றுநோயாளிகளுக்கு சவுந்தர்யா ரஜினிகாந்த் ஆதரவு
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையின் காரணமாக முடி உதிர்வைச் சந்திப்பவர்களுக்கு உதவும் நோக்கில், 800-க்கும் மேற்பட்டோர் முடிதானம் செய்யும் பிரம்மாண்ட சாதனை நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. லேடீஸ் சர்க்கிள் இந்தியா அமைப்பு மற்றும் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சியை இயக்குநரும் திரைப்படத் தயாரிப்பாளருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சௌந்தர்யா ரஜினிகாந்த், தனது பாட்டியும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, […]