ரசிகர் மன்றம் தொடங்கி உங்களை நீங்களே கேலிக்கூத்தாக்காதீங்க – ரிஷி, சனந்துக்கு மிஷ்கின் அட்வைஸ்!
ஜியோ ஸ்டுடியோஸ் வழங்கும், சிக்யா என்டர்டெயின்மென்ட் மற்றும் தம்மம் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரிஷிகாந்த், சனந்த், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘டோரதி’. படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், படக்குழுவின் சார்பில் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய திருநர் சமூக ஆர்வலர் ஷபிதா, கடந்த 16 ஆண்டுகளாக திருநர் சமூகத்திற்காக பணியாற்றி வருவதாகக் கூறியதுடன், ‘டோரதி’ தங்கள் சமூகத்தின் குரலாக அமைந்துள்ளதாக தெரிவித்தார். […]