Browsing tag

Radhika Sarathkumar

நடிகர் சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்பட டிரைலர்!

சூர்யா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. மகிழ்ச்சி, நெகிழ்ச்சி, நகைச்சுவை மற்றும் இனிமையான தருணங்களை ஒன்றிணைத்து, அனைத்து தரப்பு ரசிகர்களும் குடும்பத்துடன் ரசிக்கும் வகையிலான முழுமையான திரைப்பட அனுபவத்தை வழங்கும் படமாக இது உருவாகியுள்ளது. வெங்கி அட்லூரி இயக்கத்தில், சூர்யதேவர நாக வம்ஷி மற்றும் சாய் சௌஜன்யா தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம், இந்த ஆண்டின் முக்கியமான குடும்ப பொழுதுபோக்கு படங்களில் ஒன்றாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 40 வயதைக் […]

குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம் என நம்பிக்கை தெரிவித்த சூர்யா!

சிதாரா என்டர்டெயின்மென்ட்ஸ், ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் நிறுவனங்கள் தயாரிப்பில், இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கோவையில் கோலாகலமாக நடைபெற்றது. ஆகஸ்ட் 14-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ள இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஆயிரக்கணக்கான ரசிகர்களும், மாணவர்களும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை திருவிழாவாக மாற்றினர். இந்த விழாவில் நடிகர் சூர்யா, இயக்குநர் வெங்கி அட்லூரி, இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார், நடிகை […]

ஆகஸ்ட் 2-ம் தேதி ‘விஸ்வநாத் & சன்ஸ்’ இசை வெளியீட்டு விழா!

நடிகர் சூர்யாவின் 46-வது திரைப்படமாக உருவாகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் இசை வெளியீட்டு விழா ஆகஸ்ட் 2-ம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடித்துள்ளார். மேலும் ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதையொட்டி […]

சூர்யா குரலில் ‘விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்’ பட பாடல் வெளியானது!

“பட்டாம்பூச்சி / நேனோ பட்டர்ஃப்ளை” என்ற முதல் சிங்கிள் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படக்குழு, தற்போது அடுத்த பாடலாக “தி வெட்டிங் சாங்” பாடலை வெளியிட்டுள்ளது. வெளியான சில நிமிடங்களிலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள இப்பாடல், இந்த சீசனின் கொண்டாட்டப் பாடலாக மாறி வருகிறது. திருமணக் கொண்டாட்டத்தின் மகிழ்ச்சி, உற்சாகம் மற்றும் குடும்ப பாசத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்பாடலில், சூர்யா மற்றும் மமிதா பைஜு ஆகியோர் தங்களது உற்சாகமான […]

கவின், நயன்தாரா நடித்த ‘ஹாய்’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது

நயன்தாரா மற்றும் கவின் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள ‘ஹாய்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடலான ‘ரசகுல்லா’ பாடலும், அதற்கான லிரிக்கல் வீடியோவும் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் நயன்தாரா, கவின், கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா சரத்குமார், விடிவி கணேஷ், சத்யன், ஆதித்யா கதிர், குரேஷி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராஜேஷ் சுக்லா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார். கலை இயக்கத்தை எஸ். […]