சாதி ஆதிக்கம், பண பலத்தை நொறுக்கியுள்ளது தவெக வெற்றி: இயக்குநர் பா. ரஞ்சித் புகழாரம்
தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி, சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மற்றும் அதன் தலைவர் விஜய் அவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பிரபல இயக்குநர் பா. ரஞ்சித் தவெக-வின் வெற்றியை சமூக மாற்றத்திற்கான ஒரு முக்கிய புள்ளியாகக் குறிப்பிட்டு வாழ்த்தியுள்ளார். பாரம்பரிய அரசியல் முறையை உடைத்த வெற்றி இயக்குநர் பா. ரஞ்சித் தனது வாழ்த்துச் செய்தியில், தமிழக அரசியலில் […]