காதல் மற்றும் திருமண வாழ்க்கை குறித்து, நித்யாமேனன் மனம் திறந்த பேச்சு..
பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி – நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ படம் நாளை ரிலீஸாகிறது. இதையொட்டி, தனது தனிப்பட்ட வாழ்க்கை, காதல் உறவுகள் குறித்து நித்யா மேனன் மனம் திறந்து தெரிவிக்கையில், ‘எனக்கு மூன்று மாதக் குழந்தையாக இருந்தபோது, வேலைக்குச் சென்ற என் அம்மாவின் மகப்பேறு விடுப்பு முடிந்தது. பாட்டியின் மடியில் என்னைப் போட்டுவிட்டு அம்மா வேலைக்குச் சென்றார். பாட்டியே அம்மாவின் இடத்தை நிரப்பினார். சிறுவயதிலிருந்தே நான் தனிமை விரும்பி. கூட்டத்தில் சேர முடியவில்லை. […]