Browsing tag

Kayadu Lohar

துல்கர் சல்மானின் ‘ஐ அம் கேம்’ படத்தின் முதல் பாடல் வெளியானது!

துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் ‘ஐ அம் கேம்’ (I Am Game) திரைப்படத்தின் முதல் பாடலான ‘அருகே அருகே’ வெளியாகியுள்ளது. ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ள இப்பாடலை விக்னேஷ் ராமகிருஷ்ணா எழுதியிருக்க, அர்மான் மாலிக் பாடியுள்ளார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் பாடல் வெளியாகியுள்ளது. பாடல் வெளியான சில மணி நேரங்களிலேயே ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகிறது. துல்கர் சல்மானின் வேஃபரர் ஃபிலிம்ஸ் […]

நானியின் “தி பாரடைஸ்” படத்தின் டீசர் வெளியானது

‘தி பாரடைஸ்’ டீசர் வெளியீடு: நானியின் மிரட்டலான அவதாரம்… அனிருத்தின் பின்னணி இசையில் மிரள வைத்த பிரம்மாண்ட காட்சிகள்! ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்ட திரைப்படமான ‘தி பாரடைஸ்’ (The Paradise), இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. ஃபர்ஸ்ட் லுக், கிளிம்ப்ஸ் மற்றும் ‘ஆயா ஷேர்’ பாடல் என வெளியான ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது படத்தின் அதிரடியான டீசர் வெளியாகி இணையத்தில் கவனம் […]

துல்கர் சல்மானின் “ஐயம் கேம்” படத்தின் டிரெய்லர் வெளியானது

மலையாள திரையுலகின் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றான துல்கர் சல்மான் நடித்துள்ள ‘I’m Game’ திரைப்படத்தின் அதிரடி டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு, இந்த திரைப்படம் ஆகஸ்ட் 20, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. Wayfarer Films நிறுவனம் தயாரித்துள்ள இந்த மெகா பட்ஜெட் ஃபேன்டஸி ஆக்‌ஷன் த்ரில்லரை, நஹாஸ் ஹிதாயத் இயக்கியுள்ளார். துல்கர் சல்மான் மற்றும் ஜோம் வர்கீஸ் இணைந்து தயாரித்துள்ள […]

‘AK 64’-ல் திடீர் மாற்றம்! ஸ்ரீலீலாவுக்குப் பதில் இவரா?

தமிழில் அறிமுகமாகி வளர்ந்து வரும் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஸ்ரீலீலா, சமீபகாலமாக சில பெரிய பட வாய்ப்புகளைத் தவறவிட்டு வருவதாகத் திரையுலகில் பரவலான பேச்சுகள் அடிபட்டு வருகின்றன. தவறிய தெலுங்குப் படங்கள் தெலுங்குத் திரையுலகில் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த அகில் அக்கினேனியின் ‘லெனின்’ மற்றும் ‘அனகனகா ஒரு ராஜு’ ஆகிய இரு முக்கியத் திரைப்படங்களின் வாய்ப்புகள் ஸ்ரீலீலாவை விட்டு கைநழுவின. இதுமட்டுமின்றி, விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவான ‘கிங்டம்’ திரைப்படத்திற்கும் முதன்முதலில் இவரே பரிசீலிக்கப்பட்டார் என்ற […]

இதயம் முரளி திரை விமர்சனம்

அறிமுக இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில், அதர்வா கதாநாயகனாக நடித்துள்ள ‘இதயம் முரளி’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. காதல், நினைவுகள் மற்றும் உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்பதை பார்க்கலாம். கதை திருமணத்திற்கு முந்தைய நாள் நண்பர்களுடன் வெளிநாட்டில் இருந்து சென்னை திரும்பும் முரளி (அதர்வா), விமானத்தில் சந்திக்கும் ஒருவரிடம் தனது காதல் வாழ்க்கையை பகிரத் தொடங்குகிறார். பள்ளிப் பருவத்தில் ப்ரீத்தி முகுந்தனை காதலிக்கும் முரளி, பலமுறை தனது […]