ஸ்வேன் அகாடமி லோகோவை வெளியிட்டார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்
திரை எழுத்தாளர்களின் திறமைகளை வளர்ப்பதுடன், அவர்களின் படைப்புரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் (SWAN), ஐபி கிளைம்ப் நிறுவனத்துடன் இணைந்து ‘ஸ்வேன் அகாடமி’யை சென்னையில் தொடங்கியுள்ளது. இதன் தொடக்க விழாவை முன்னிட்டு, சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் எழுத்தாளர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 300-க்கும் மேற்பட்ட வளர்ந்து வரும் திரை எழுத்தாளர்கள் மற்றும் திரையுலகைச் சேர்ந்த முன்னணி பிரபலங்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை வரவேற்ற ஸ்வேன் அமைப்பின் தலைவரும் இயக்குநருமான சேரன், அகாடமியின் […]