முன்னோர்களுக்கு முன் உருவான விஷயம் இது: நடிகர் யோகிபாபு நம்பிக்கை..
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர் யோகிபாபு ஒவ்வொரு திரைப்படமும் முடிந்த பிறகு, கோயில் கோயிலாக சென்று வருவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். சமீபத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உள்ள மோரனபள்ளியில் ராகு கேது அதர்வன ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா கோயிலில் சாமி தரிசனம் செய்தார். சாமிக்கு தனது கையால் தீபாராதனை காண்பித்தும் வழிபட்டார். இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகள் வைரலானது. ஆன்மீகத்தில் நாட்டம் கொண்ட யோகிபாபு, கையில் பல நிறங்களில் கயிறும், காப்பும், தாயத்தும் கட்டியிருக்கிறார். […]