Browsing tag

compliant

தயவுசெய்து யாரேனும் என்னை காப்பாற்றுங்கள்: நடிகை தனுஸ்ரீ தத்தா கண்ணீர்..

இந்தி நடிகை தனுஸ்ரீ தத்தா தனது இன்ஸ்டா பக்கத்தில், கண்ணீர் மல்க பதிவு செய்துள்ள நிகழ்வு தற்போது வைரலாகி வருகிறது. தமிழில் விஷால் ஜோடியாக, ’தீராத விளையாட்டு பிள்ளை’ படத்தில் நடித்தவர் நடிகை தனுஸ்ரீ தத்தா. கடந்த 2018-ம் வருடம் நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார் தெரிவித்திருந்தார் தனுஸ்ரீ தத்தா. ‘ஹார்ன் ஓகே ப்ளீஸ்’ என்ற இந்திப் படத்தில் நடித்தபோது, நானா படேகர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக போலீஸில் புகார் கொடுத்தார். இந்தியாவில் […]

நடிகர் மகேஷ்பாபுவுக்கு, நுகர்வோர் ஆணையம் நோட்டீஸ்..

மகேஷ்பாபுவுக்கு நோட்டீஸ் அனுப்பிய நிகழ்வு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான மகேஷ்பாபு தமிழில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘ஸ்பைடர்’ படத்தில் நடித்திருந்தார். இப்போது, ராஜமவுலி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், தெலங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்ட நுகர்வோர் ஆணையம் மகேஷ் பாபுவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஹைதராபாத்தை சேர்ந்த சாய் சூர்யா டெவலப்பர்ஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் விளம்பர தூதராக மகேஷ்பாபு இருந்து வருகிறார். அவர் வரும் விளம்பரத்தைப் பார்த்து, பாலாபூர் […]

நடன இயக்குனர் சங்கத்தலைவர் தினேஷ் மீது பல்வேறு குற்றச்சாட்டு; அடிதடி, போராட்டம்..

நடன இயக்குநர் தினேஷ் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் என கூறப்பட்டுள்ளது. இது பற்றிய தகவல்கள் காண்போம்.. தமிழ் சினிமாவில் நடன இயக்குனர் சங்கத் தலைவர் தினேஷ் மீது, தற்போது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. ராஜு சுந்தரமின் நடனக் குழுவில் பணியாற்றிய தினேஷ், கடந்த 25 ஆண்டுகளில் 100 படங்களுக்கும் மேல் நடன இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். ‘ஆடுகளம்’ படத்தில் சிறந்த நடன இயக்குனருக்கான தேசிய விருதையும் பெற்றார். மேலும், லோக்கல் சரக்கு, நின்னு விளையாடு, […]

கமல்ஹாசன் மீது காவல்நிலையத்தில் புகார்

சர்ச்சைப் பேச்சு தொடர்பாக, கமல் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய விவரம் காண்போம்.. மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா நடித்துள்ள ‘தக் லைஃப்’ படம் வருகிற ஜூன் 5-ந்தேதி வெளியாகவுள்ளது. தற்போது, இப்படத்தின் புரமோஷன் பணிகள் களை கட்டியுள்ளது. அவ்வகையில் நடைபெற்ற ‘தக் லைஃப்’ பட இசை வெளியீட்டு விழாவில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது மேடையில் பேசிய அவர், ‘தான் கமலின் எவ்வளவு பெரிய ரசிகன்’ என்பதை […]

எனது மரியாதையை குறைக்கும் வகையில் போலியாக மார்ஃபிங்: நடிகை கிரண் புகார்..

‘பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள்’ என கேட்டுக்கொண்டுள்ளார் கிரண். இது பற்றிய தகவல்கள் காண்போம்.. நடிகை கிரண் வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர். பட வாய்ப்புகளுக்காக கவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இருப்பினும் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் இருந்தாலும், மறுபுறம் விமர்சனங்களையும் சந்தித்து வருகிறார். சப்ஸ்கிரைபர் ஒன்லி பிளான்களை அறிமுகம் செய்து, அவருடைய எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள் மற்றும் வீடியோ சாட்டிற்காக கட்டணத்தை வசூலித்ததாக தகவல் வெளியானது. அவர் மீது வதந்திகளும், சர்ச்சைகளும், வந்த வண்ணம் […]

நடிகர் சூரியின் சகோதரர் மீது ஆட்சியரிடம் புகார்..

சூரியின் சகோதரர் மீது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய விவரம் காண்போம்.. சூரியின் நடிப்பில் வெளியான ‘மாமன்’ திரைப்படம் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், அவர் சொந்தமாக மதுரை நரிமேடு பகுதியில் உணவகம் நடத்தி வருகிறார். இந்த உணவகத்தை அவரது சகோதரர் லட்சுமணன் கவனித்து வருகிறார். அதே பகுதியில் முத்துசாமி என்ற நபர் ‘அலைகள்’ என்கிற பெயரில் அச்சகம் ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கும் அம்மன் உணவகத்தின் உரிமையாளரான சூரியின் சகோதரர் லட்சுமணனுக்கும் […]

‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ பாட்டு விவகாரம்: ஜனசேனா கட்சி எச்சரிக்கை..

‘கோவிந்தா கோவிந்தா’ பாடலை நீக்கவேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது பற்றிய விவரம் காண்போம்.. ஆர்யா தயாரிப்பில், சந்தானம் நடித்துள்ள ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படம் நாளை மறுதினம் ரிலீஸாக உள்ளது. இப்படம் காமெடி பேய் படமாக உருவாக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே டிடி ரிட்டர்ன் என்ற பெயரிலும் திகில் காமெடி படங்கள் வெளிவந்துள்ளது. இந்நிலையில், இப்படத்திற்கு சிக்கல் உருவாகியுள்ளது. அதாவது, இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையிலும், திருப்பதி பெருமாளை இழிவுபடுத்தும் வகையிலும் ‘கோவிந்தா கோவிந்தா’ பாடல் […]

நடிகர் நெப்போலியன் மகனின் உடல்நிலை பற்றி தவறான தகவல்: போலீஸில் புகார்

நடிகர் நெப்போலியன் தன்னுடைய மகன் தனுஷுக்காக அமெரிக்காவில் குடியேறினார். பின்னர், தனுஷ்க்கு ஜப்பானில் மிக சிறப்பாக திருமணம் நடைபெற்றது. நட்சத்திர பிரபலங்கள் கலந்து கொண்டனர் என்பது தெரிந்ததே. இந்நிலையில், தற்போது நெப்போலியன் மகனின் உடல்நிலை குறித்து இணையத்தில் வதந்தி பரப்புவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மயோபதி மருத்துவமனை மருத்துவர் திருநெல்வேலி எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில், ‘நான் முன்னாள் மத்திய அமைச்சரும் நடிகருமான நெப்போலியன் அவர்கள் நடத்தி வரும் ஜீவன் […]