Browsing tag

Music

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் அப்டேட்ஸ்..

விஜய்யின் கடைசிப்படமாக, ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜனநாயகன்’ படத்தின் அப்டேட்ஸ் பார்ப்போம்… ‘ஜன நாயகன் திரைப்படம்’ நந்தமுரி பாலகிருஷ்ணாவின் ‘பகவந்த் கேசரி’ என்ற படத்தின் ரீமேக் என கூறப்படுகிறது. இந்நிலையில், இது பற்றிய சுவாரசியமான தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அன்படி, ‘ஜன நாயகன்’ படத்தின் 60 சதவீத காட்சிகள் பகவந்த் கேசரியைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. படத்தில், விஜய்யின் பெயர் ‘தளபதி வெற்றி கொண்டான்’ என்று கூறப்படுகிறது (TVK). இது பகவந்த் கேசரியில் பாலகிருஷ்ணாவின் […]

‘டியூட்’ படத்தில் இளையராஜா பாடல்களை நீக்க, ஐகோர்ட் உத்தரவு..

இசைஞானி இளையராஜாவின் திரைப்பாடல்கள் காலம் கடந்தும் நிலைத்து நிற்பவை. எந்தக் காற்றிலும் கலைந்து போகாதவை என்பது தெரிந்ததே. அவ்வகையில், இளையராஜா தனது பாடல்களுக்கான காப்புரிமைக்காக வழக்கும் தொடர்ந்து வருகின்றார். இது தொடர்பான நிகழ்வு பார்ப்போம்.. பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் மாதீஸ்வரன் இயக்கிய ‘டியூட்’ திரைப்படத்தில், தனது இசையமைப்பில் வெளியான ‘புது நெல்லு புது நாத்து’ திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த, ‘கருத்த மச்சான்’ மற்றும் ‘பணக்காரன்’ படத்தில் இடம் பெற்றிருந்த ‘நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும்’ ஆகிய பாடல்களை […]

‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழா; விஜய் மூவ் என்ன?: ரசிகர்கள் ஆர்வம்..

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய்யின் கடைசிப் படமாக உருவாகி வரும் ‘ஜனநாயகன்’ படம் பொங்கலை முன்னிட்டு வெளிவருவது தெரிந்ததே. 3 வருடங்களாக விஜய்யின் படங்களுக்கு இசை வெளியீட்டு விழா நடைபெறவில்லை. கடைசியாக ‘வாரிசு’ திரைப்படத்திற்கு இசை வெளியீட்டு விழா 2023-ம் ஆண்டு நடைபெற்றது. அதன் பிறகு வெளியான லியோ மற்றும் GOATஆகிய படங்களுக்கு இசை வெளியீட்டு விழா நடைபெறவில்லை. எனவே, 3 வருடங்கள் கழித்து இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காகவும், தன் கடைசிப் பட இசை வெளியீட்டு விழா […]

விஜய் ரசிகர்களுக்கு நியூ யீயர் ட்ரீட்..

விஜய்யின் கடைசிப் படமாக உருவாகி வரும் ‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்தும் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். அடுத்த மாதம் 27-ந்தேதி மலேசியாவில் ஆடியோ லான்ச் நடைபெற இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிகழ்வு கோலிவுட் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் இதுவரை 68 படங்களில் நடித்துள்ள நிலையில், இதிலிருந்து 30-க்கும் மேற்பட்ட ஹிட் பாடல்களை சம்பந்தப்பட்ட பாடகர்களை வைத்து பாட வைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு கான்செர்ட் ஐடியாவுடன் இசை […]

‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழா: கின்னஸ் சாதனை படைக்குமா?

விஜய்யின் கடைசிப் படமாக வெளியாகவிருக்கும் ‘ஜனநாயகன்’ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. அனிருத் இசையில் படத்தின் முதல் சிங்கிளான ‘தளபதி கச்சேரி’ என்ற பாடல் வெளியாகி வைரலானது. இதனைத் தொடர்ந்து, டிசம்பர் முதல் வாரத்தில் இரண்டாவது பாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், டிசம்பர் இறுதியில் ‘ஜனநாயகன்’ பட இசை வெளியீட்டு விழா மிகப் பிரம்மாண்டமாக மலேசியாவில் நடைபெற உள்ளது. இசை வெளியீட்டு விழாவோடு சேர்த்து, ஒரு கான்சர்ட்டையும் படக்குழு திட்டமிட்டுள்ளது. அந்த கான்சர்ட்டில் திரையுலகில் […]

புதிதாக இசை நிறுவனம் தொடங்க அனிருத் திட்டம்..

கூலி, ஜெயிலர்-2, ஜனநாயகன் ஆகிய படங்களைத் தொடர்ந்து, வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் ‘அரசன்’ படத்துக்கும் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார் அனிருத். இப்படத்தில் அவருக்கு சம்பளமாக அல்லாமல் இசை உரிமையினை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு வழங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த உரிமையினை விற்காமல் புதிதாக இசை நிறுவனம் ஒன்றிணைத் தொடங்கினால் என்ன என்ற ஆலோசனையில் இருக்கிறார் அனிருத். இசை நிறுவனம் ஒன்றைத் தொடங்கி, ‘அரசன்’ படத்தின் ஒட்டுமொத்த பாடல்களையும் அதிலேயே வைத்துக் கொள்ள முடிவு செய்திருக்கிறார். மேலும், தனது இசையில் அவ்வப்போது […]

மலேசியாவில் ‘ஜனநாயகன்’ இசைவிழா: தமிழக ரசிகர்களுக்கு ஏற்பாடு?

விஜய் நடிப்பில் கடைசிப்படமாக உருவாகி வரும் ‘ஜனநாயகன்’ படத்தில் பாபி தியோல், பூஜா ஹெக்டே, கவுதம் வாசுதேவ் மேனன், மமிதா பைஜு, பிரகாஷ்ராஜ், பிரியாமணி, நரேன் உள்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் சில தினங்களுக்கு முன்பாக வெளியாகி வைரலானது. ‘தளபதி கச்சேரி’ என்ற பெயரில் வெளியான இந்த பாடலை தெருக்குரல் அறிவு எழுதியிருந்தார். விஜய், அனிருத், அறிவு ஆகியோர் இணைந்து பாடியிருந்தனர். பொதுவாக, விஜய் படங்களின் இசை வெளியீட்டு விழாக்கள் சென்னையில் […]

மலேசியாவில் ‘ஜனநாயகன்’ பட இசை வெளியீட்டு விழா..

விஜய்யின் கடைசிப்படமாக உருவாகி வரும் ‘ஜனநாயகன்’ படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல், கவுதம் வாசுதேவ் மேனன், ப்ரியாமணி, நரேன், மமிதா பைஜு உள்பட பலர் நடித்துள்ளனர். கேவிஎன் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9-ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது என்பது குறித்து ரசிகர்கள் ஆர்வமுடன் கேள்வி எழுப்பி வந்தனர். இது விஜய்யின் கடைசிப் படம் என்பதால், இந்த […]

வரமும் சாபமும் உணர்ந்தேன்: தனுஷ் பேச்சு வைரல்..

கோலிவுட்டை கடந்து பாலிவுட்டிலும் தடம் பதித்து வருகிறார் தனுஷ். அவ்வகையில் இவரது நடிப்பில் ‘தேரே இஷ்க் மெய்ன்’ படம் வருகிற 28-ந்தேதி வெளியாகிறது. இந்நிலையில், துபாயில் வாட்ச் விளம்பர நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் தனுஷ். அப்போது அங்கிருந்த விருந்தினர்கள், ‘ஒய் திஸ் கொலவெறி’ பாடல் உருவான விதம் மற்றும் உலகளாவிய வெற்றி குறித்து தனுஷிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு தனுஷ், ‘நகைச்சுவையாக உருவாக்கப்பட்ட பாடல் தான் ‘ஒய் திஸ் கொலவெறி’. அதில் பணிபுரிந்துவிட்டு அப்படியே […]

மதத்தின் பெயரால், பிறரை காயப்படுத்தக் கூடாது: ஏ.ஆர்.ரகுமான் பேச்சு..

ஏழு தேசிய விருதுகள் மற்றும் இரண்டு ஆஸ்கர் விருதுகளும் வென்று உலக அளவில் புகழ் பெற்று திகழ்கிறார் ஏ.ஆர்.ரகுமான். இவரது இயற்பெயர் திலீப்குமார் ஆகும். அவரும், அவரது குடும்பத்தினரும் இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்ட பிறகு, அவர் தனது பெயரை அல்லாஹ் ரக்கா ரகுமான் என மாற்றிக்கொண்டார். மேலும், சூபி தத்துவம் மீது அதிக ஈடுபாடு கொண்டவரான அவர், ‘ராக்ஸ்டார்’. ‘ஜோதா அக்பர்’ உள்பட பல படங்களில் சூபி இசையை பயன்படுத்தி பாடல்களை உருவாக்கியுள்ளார். இந்நிலையில், ஏ.ஆர்.ரகுமானிடம் மதம் […]