உணவு கிடைக்காதவர்களுக்கு பிரியாணி என்பது எளிதில் கிடைக்காத ஒன்று! – இயக்குநர் விக்னேஷ் சிவன்
பசியால் வாடும் ஏழை, எளிய மக்களின் துயரைப் போக்கும் நோக்கில், ‘Help on Hunger Foundation’ தன்னார்வத் தொண்டு நிறுவனம் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட #ZeroHunger உணவு வழங்கும் நிகழ்வைத் திரைப்பட இயக்குநர் விக்னேஷ் சிவன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார். இந்நிகழ்வின் மூலம் வீடற்றவர்கள், ஆதரவற்றோர், முதியவர்கள் உள்ளிட்ட 5,000 பேருக்குப் பிரியாணி வழங்கப்பட்டது. நிகழ்வில் பேசிய இயக்குநர் விக்னேஷ் சிவன், “இன்றைய சூழலில் நம்மில் பலருக்குப் பிரியாணி என்பது விடுமுறை நாட்களில் விரும்பிச் சாப்பிடும் […]