Browsing tag

Arya

ஆர்யாவின் 40வது படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு!

நடிகர் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘ஹலோ காதல்’ திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. ‘பிரணய விலாசம்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் நிகில் முரளி இப்படத்தை இயக்கியுள்ளார். ஆர்யா கதாநாயகனாக நடிக்கும் 40-வது திரைப்படம் என்ற சிறப்பையும் இப்படம் பெற்றுள்ளது. வரும் டிசம்பர் 4, 2026 அன்று இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் நிகிலா விமல் மற்றும் வைஷ்ணவி சைதன்யா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். காதலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் டீசர், படத்தின் […]

ஆர்யாவின் 40-வது படத்திற்கு ஹலோ காதல் எனத் தலைப்பு?

நடிகர் ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் அவரது 40-வது திரைப்படத்திற்கு ‘ஹலோ காதல்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் நிகில் முரளி இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தில் நிகிலா விமல் மற்றும் வைஷ்ணவி சைதன்யா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கும் இப்படத்தை, ஆர்யா தனது ‘தி ஷோ பீப்பிள்’ தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். ஆர்யாவின் 40-வது படமாக […]

மிஸ்டர் எக்ஸ் திரைப்பட விமர்சனம்

இந்தியாவின் ரா (RAW) உளவு அமைப்பில் பணியாற்றும் சரத்குமார், அணு ஆயுதத்திற்கான முக்கிய மூலப்பொருளை பல ஆண்டுகளாக பாதுகாப்பாக வைத்திருக்கிறார். ஆனால், ரஷ்ய ராணுவம் அவரை கைது செய்து, அந்த மூலப்பொருளை பாகிஸ்தானுக்கு அனுப்ப திட்டமிடுகிறது. இந்த ஆபத்தான சூழலில், ரா அதிகாரியான மஞ்சு வாரியர் தலைமையிலான குழு, சரத்குமாரையும் அந்த மூலப்பொருளையும் மீட்க முயற்சிக்கிறது. முதல் முயற்சி தோல்வியடைய, பின்னர் ஆர்யாவின் உதவியுடன் மீண்டும் ஒரு பெரிய மிஷன் தொடங்குகிறது. இந்த முயற்சி வெற்றியடைந்ததா? அதற்குப் […]

அதிரடி ஆக்ஷன் முதல் கியூட் காதல் வரை: ஆர்யாவின் மெகா ‘லைன்-அப்’ – முழு விவரம்!

தமிழ் திரையுலகின் ‘சாக்லேட் பாய்’ மற்றும் ‘ஆக்ஷன் ஹீரோ’ என வலம் வரும் நடிகர் ஆர்யா, தற்போது அடுத்தடுத்து பிரம்மாண்டமான படங்களில் கமிட்டாகி ரசிகர்களுக்கு பெரிய விருந்து வைக்கக் காத்திருக்கிறார். அவரது கைவசம் உள்ள படங்களின் சுவாரஸ்யமான தகவல்கள் இதோ: 1. ஏப்ரல் 17-ல் ‘மிஸ்டர் எக்ஸ்’ (Mr. X) ரிலீஸ்! ‘எஃப்.ஐ.ஆர்’ புகழ் இயக்குநர் மனு ஆனந்த் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள ‘மிஸ்டர் எக்ஸ்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இது […]