முதலமைச்சர் விஜய்யுடன் பயணித்தது குறித்து இசையமைப்பாளர் அனிருத் நெகிழ்ச்சி பதிவு!
நடிகர் விஜய்யுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் குறித்து இசையமைப்பாளர் அனிருத் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம் பல்வேறு சிக்கல்களை கடந்து கடந்த 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. இதன் காரணமாக திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. படம் வெளியான முதல் நாளிலேயே ரூ.80 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக தகவல் வெளியான நிலையில், தற்போது […]