சண்முக பாண்டியனின் வாணவேடிக்கை டிரெய்லர் வெளியானது!
கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் எல்.கே. சதீஷ் எம்.பி. தயாரிப்பில் உருவாகியுள்ள ‘வாணவேடிக்கை’ திரைப்படத்தின் ட்ரெய்லரை நடிகர்கள் ஆர்யா மற்றும் ஜெயம் ரவி இன்று வெளியிட்டனர். சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை இயக்குநர் திரு இயக்கியுள்ளார். சாம் சி.எஸ் இசையமைக்க, அர்வி ஒளிப்பதிவு செய்துள்ளார். சுதர்சன் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். இப்படத்தில் ஷிவானி ராஜசேகர் கதாநாயகியாக நடித்துள்ளார். குறிப்பாக, இயக்குநர் மோகன் ராஜா முதன்முறையாக முழுநீள வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. […]